தூத்துக்குடி அண்ணாநகர் 9வது தெருவில் அமைந்துள்ள அருந்ததியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன் மற்றும் பெருமாள்சுவாமி கோவில் கொடைவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தலைமை தாங்கி துவக்கி வைத்தனர்.

விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் இந்த கோவில் கொடைவிழா நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு என்னை அழைத்த போதும் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு உங்களது அழைப்பை ஏற்று மணமகிழ்ச்சியோடு கலந்து கொண்டுள்ளேன். காரணம் கடந்த அதிமுக ஆட்சியில் இரண்டு ஆண்டுகளாக கோவில் விழாக்கள் நடைபெறாமல் இருந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்றபின் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவில்விழா உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடத்துவதற்கு உத்தரவு பிறபிக்கப்பட்டதால் பல நிகழ்ச்சிகள் நடைபெறுவதன் மூலம் மக்கள் மணமகிழ்ச்சியோடு இருக்கின்றனர். காரணம் இதுபோன்ற விழாவில் தான் உறவினர்கள் நண்பர்கள் அண்ணன் தம்பி என அனைவரும் ஒன்றினைந்து மணமகிழ்;ச்சியை வெளிப்படுத்தி கொள்ளும் வாய்ப்பாக அமைகிறது. கச்சேரி என்றால் பழைய பாடல் முதல் புதிய பாடல் வரை கேட்பது மனதிற்கு இனிதாகவும் மனமகிழ்ச்சியாகவும் ஒருவகையான மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு கொள்ளும் நிகழ்ச்சியாக உள்ளது. இப்போது உள்ள சிறுவர்கள் புதிய பாடல்களை மட்டுமே விரும்புவார்கள் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் தமிழகம் முழுவதும் பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாத கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதே போல் தேரோட்டம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் பல கோவில்களில் முழுநேரமும் பக்தர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. அனைவரும் ஒற்றுமையுடன் எல்லா செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். என்று நானும் வேண்டி கொள்கிறேன் என்று பேசினார்.
விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மண்டலத் தலைவர் அன்னலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், சோமசுந்தரி, பகுதி செயலாளர் ரவீந்திரன், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவக்குமார் என்ற செல்வின், வட்ட செயலாளர் பாலு, வட்ட துணைச்செயலாளரும் கோவில் பூசாரியுமான சுந்தர்ராஜ், பகுதி இளைஞர் அணி செயலாளர் ரமேஷ், கோவில் நிர்வாகிகள் ரவி, குரு, குட்டிமாரிமுத்து, சூர்யா, மாரியப்பன், கௌதம், தர்மர், முத்து, வேல்முருகன், சிவா, மாரிமுத்து, ஈஸ்வரன், பரமா, முனியசாமி, உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

