அடகு கடையில் மொத்தமாக நகையை திருப்பினால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :-
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதனால் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று பல்வேறு விதிமுறைகளையும் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி நகை அடகு தொழில் புரிவோருக்கான நடத்தை விதிகளையும் அறிவித்து உள்ளது.
பொதுக்கூட்டம், விழாக்கள் போன்ற நிகழ்வுகளின்போது வாக்காளர்களுக்கு மறைமுகமாக அடகுவைத்த நகைகளை திருப்புவதற்கு டோக்கன், அடையாள வில்லைகள் மற்றும் இதர வகைகளை கையாண்டு வருவதை எந்த ஒரு உரிமையாளரும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. மீறினால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தண்டணைக்குரிய குற்றமாகும்.

அடகு வைக்கப்பட்டுள்ள நகைகள், வேட்பாளர்கள் முகவர்களால் மொத்தமாக மீளத் திருப்பப்பட்டு வாக்காளர்களுக்கு திருப்பி வழங்கப்படுவதை தவிர்க்க வேண்டும். மொத்தமாக அடகு நகைகளை திருப்ப எவரேனும் முற்பட்டாலோ அல்லது சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு நேரில் வந்தாலோ சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காலத்தில் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை தங்களது நிறுவனத்தை அணுகி வெவ்வேறு அடகு நகைகளை திருப்ப முற்பட்டால் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது அடகு வைக்கப்படும் நகைகள் சந்தேகத்துக்கு இடமான வகையில் மீளத் திருப்பப்படும் போது அவை குறித்த விவரங்களை உடனடியாக அருகில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தாசில்தார்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.