தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த திமுக ஆட்சியின் போது பெருகி வரும் ஜனத்தொகைக்கேற்ப மாநகரில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் குறிப்பாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. பின்னர் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 10 ஆண்டுகளாக அந்த பணி நடைபெறாமல் காட்சி பொருளாக இருந்துவந்தன. இதை முறையாக செயல்படுத்தி மக்கள் நலனில் அக்கறையோடு பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் படி தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு கட்டமைப்பு பணிகளை மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற பின் நடைபெற்று வருகின்றன. இரவு பகல் பாராமல் அனைத்து பகுதிகளிலும் எல்லா பணிகளும் நடைபெறுகிறது. அதே போல் தூத்துக்குடி பிரதான சாலையான 3ம் மைல் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் முறையாக நடைபெற்று வருகிறது. அதை விரைவுப்படுத்தி முடிக்கப்பட்டு நெடுஞ்சாலை துறை கட்டுபாட்டின் கீழ் உள்ள குண்டும் குழியுமான சாலையை முழுமையாக சீரமைக்கப்பட்டு பணிகள் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் ஞாயிறுகிழமைக்குள் வந்துவிடும் அதுவரை அருகிலுள்ள பக்கிள் ஓடை சாலையையும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். என்று மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டபின் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த ஆய்வின் போது கவுன்சிலர்கள் இசக்கிராஜா, சந்திரபோஸ், மற்றும் பிரபாகர், ஜோஸ்பர், உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

