நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
நாகப்பட்டினம் ஏப்ரல் 03
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 203 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.அதனைத்தொடர்ந்து வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் பெருங்கடம்பனூர் ஊராட்சியைச் சார்ந்த பாரதிதாசன் த/பெ வீராச்சாமி என்பவர் மற்றும் வாசுகி த/பெ பிச்சை ஆகிய இருவருக்கும் அளிக்கப்பட்ட மனுவிற்கு உடனடி தீர்வாக ரூ.9,150 மதிப்பீட்டில் மூன்று சக்கர சைக்கிளையும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிக்கான பாதுகாவலர் நியமன சான்றிதழ்களையும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் வட்டம் ஆலங்குடி கிராமத்தைச் சேர்ந்த தனலெட்சுமி என்பவருக்கு மாதாந்திர மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வ.சீனிவாசன், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

