தூத்துக்குடி
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் ஒருகோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனைத்து மாவட்ட செயலாளர்களும் அதை நிறைவேற்றுவதற்கு கூட்டங்கள் மூலம் ஒன்றிய செயலாளர்களுக்கு மாவட்;ட செயலாளர்கள் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமாக அனிதா ராதாகிருஷ்ணன், வழிகாட்டுதலின் படி மாப்பிள்ளையூரணியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாமிற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் மாடசாமி தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணி அமைப்பாளரும் மாவட்ட கவுன்சிலருமான அருண்குமார் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு சங்க தலைவருமான சரவணக்குமார், விண்ணப்பபடிவத்தை வழங்கி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி துணை அமைப்பாளர் ஆரோக்கியமேரி, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், மாவட்;ட பிரதிநிதிகள் சிவக்குமார், தர்மலிங்கம், திமுக ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், துணைச்செயலாளர்கள் கணேசன், ராமசந்திரன், பொருளாளர் மாரியப்பன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, உள்பட அனைத்து கிளைக்கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் கூறுகையில் தலைமை கழகம் உத்தரவுபடி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் புதிதாக இவ்வளவு உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்று மாவட்ட கழகம் சார்பில் எங்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. எப்போதுமே அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை பொறுத்தவரையில் தலைமை கழகம் உத்தரவை செயல்படுத்துவது மட்டுமின்றி நிர்ணயம் செய்துள்ள இலக்கை விட அதிகமாக சேர்த்துக்காட்டுவது வழக்கமான பணியாக இருந்து வருகிறது. அதற்கு பெருமை சேர்க்கும் வகையில் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கிழக்கு ஒன்றிய சார்பில் அதிகமான உறுப்பினர்களை சேர்த்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் அதிகப்படியான வாக்குகளை கனிமொழி எம்.பிக்கு பெற்றுக்கொடுப்போம். என்று சபதம் ஏற்று பணியாற்றுகிறோம் என்று கூறினார்.

