நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில் “ஊட்டச்சத்தை உறுதிசெய்” திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவங்கி வைத்தார்.
தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் உடன் உள்ளார்.
நாகப்பட்டினம் மார்ச் 28
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இத்திட்டமானது 28.02.2023 அன்று துவங்கி வைக்கப்பட்டது. மேலும் இத்திட்டத்தினை அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்படுத்திடும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 0 மாதம் முதல் 6மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 170 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 340 எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பும் 0 மாதம் முதல் 6 மாதம் வரை மிதமான ஊட்டச்ச்த்து குறைபாடுள்ள 226 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 226 எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பும் மொத்தம் 566 ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1605 குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தினை நம் மாவட்டத்தில் உன்ன பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் வழங்கி “ஊட்டச்சத்தை உறுதிசெய்” திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன்னோடி திட்டமான “ஊட்டச்சத்தை உறுதிசெய்” திட்;டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் பயனாளர்களான 0 மாதம் முதல் 6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து பெட்டகங்களும் 0 மாதம் முதல் 6மாதம் வரை மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குவதும், மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 8 வாரங்களுக்கு (56 நாட்களுக்கு)- வழங்கி குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்துவதாகும். மேலும் ஐந்தாவது “ஊட்டச்சத்து இருவார விழா” மாவட்ட அளவில் இந்த ஆண்டின் கருப்பொருளான “அனைவருக்கும் ஊட்டச்சத்து ஒன்றாக ஆரோக்கியமான இந்தியாவை நோக்கி அடிப்படையில் கண்காட்சியுடன் கூடிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இவ்விழாவின் ஒரு பகுதியாக 2023 ஆம் ஆண்;டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக பிரகடனப்படுத்தியதன் மூலம் “சிறுதானிய உணவுகளின் பயன்கள் மற்றும் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைவரும் எடுத்துகொண்டனர்.மேலும் இன்றையதினம் தமிழ்நாடு கிடங்கு கழகம் சார்பில் கார்ப்ரேட் சமூகப் பொறுப்பு நிதியாக ரூபாய்.3.25 இலட்சம் மதிப்பிலான 650 ஊட்டச்சத்து பெட்டகங்கள், 650 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இதன் தொடக்கமாக இவ்விழாவில் சுமார் 60 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர்; ஆகியோரால் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட இயக்குநர் எம்.சியாமளா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும்; அரசு அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி
டிவிக்காக நாகை
மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

