தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு ஏற்கனவே வாட்ச்அப் எண் கொடுக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்கள் பலர் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் உள்ளிட்ட அலுவலர்கள் அதன் குறைபாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உடனுக்குடன் தெரிவித்து தீர்த்து வைக்கின்றனர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களை உள்ளடக்கிய ஆய்வு கூட்டம் நடத்தி மக்களின் கோரிக்கை மனுக்களை காகிதமாக எண்ணாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் ஆவணமாக கருதி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் மாநகராட்;சி 39வது வார்டுக்குட்பட்ட சிவன்கோவில், தேரடி முன்பு, குறைகேட்பை தொடங்கினார். அமைச்சர் கீதாஜீவனிடம் வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். பின்னர் பிரதி பெற்ற தெப்பக்குளம், மாரியம்மன் கோவில் தெப்பம், செல்வீஜர் தெரு, பத்திரகாளியம்மன் கோவில் தெரு, வடக்கு ரதவீதி, இரண்டாம் கேட் பகுதியில் நடைபெறும் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியை பார்வையிட்டார்.
அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வடக்கு ரதவீதி கீழரத வீதி, பகுதிகளில் கால்வாய்களில் குப்பைகள் கழிவுகள் தேங்கியுள்ளன. அதனால் கழிவுநீர் வீட்டிற்குள் வரும் நிலையுள்ளது. அதை சீர்செய்து தரவேண்டும். வடக்குரதவீதி வரதராஜபுரம் சந்திப்பில் அமைந்துள்ள கால்வாய் மிகவும் தரைமட்டத்திற்கு சென்று விட்டதால் அதில் புதிதாக உயராமான கால்வாய் வழித்தடம் அமைத்து தரவேண்டும். இந்த சுற்றுவட்டார பகுதிகளில் பசுமை பண்ணை காய்காறி அங்காடியைபோல் மாநகராட்சி மண்டபம் அருகில் அமைத்து தரவேண்டும். புதிய ரேஷன் கார்டு மற்றும் விதவைபெண் வேலைவாய்ப்பு குறுகிய சந்துப்பகுதியில் வீடு மட்டத்தை விட குறைவாக பேவர் பிளாக் சாலை அமைத்து கொடுக்க வேண்டும். உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்தனர். அவர்களிடம் அமைச்சர் கூறுகையில் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் அனைத்தும் 10 ஆண்டுகளாக முறையாக நடைபெறாமல் இருந்துள்ளன. இனி அனைத்து பணிகளும் நல்ல முறையில் செய்து கொடுக்கப்படும். உங்கள் நலனில் அக்கறை உள்ள முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்றார்.

நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி, மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், பகுதி செயலாளரும் கவுன்சிலருமான சுரேஷ்குமார், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், வட்ட செயலாளர்கள் கீதாசெல்வமாரியப்பன், கங்காராஜேஷ், சுரேஷ், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், செந்தில்குமார், நாராயணன், முன்னாள் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், செல்வக்குமார், பொன்ராஜ், இளங்கோ, கார்த்திக், அவைத்தலைவர் கணேசபாண்டியன், முன்னான் காங்கிரஸ் கவுன்சிலர் கந்தசாமி, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, துணை அமைப்பாளர் ஸ்டெப்பின், மற்றும் மணி, சீலன்ஸ்ருதி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

