நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியம் வடக்கு பனையூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பசுமையான மற்றும் தூய்மையான பள்ளிக்கான விருது வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
நாகப்பட்டினம் மார்ச் 23
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது..
பசுமையான, தூய்மையான பள்ளிக்கான விருதினை வடக்குப்பனையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு விருது மற்றும் ரூ 10,000- கான காசோலையிணையும் மற்றும் திருமருகல் ஊராட்சி ஒன்றியம், கீழ தஞ்சாவூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு விருது மற்றும் ரூ 5,000 கான காசோலையினையும், மாநில அளவில் நடைபெற்ற இல்லம் தேடி கல்வி குறும்பட கொண்டாட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஆறு படங்களில் ஒன்றாக தேர்வாகியுள்ள நாகப்பட்டினம் மாவட்டம் நாகலூர் கிராம இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் மற்றும் மைய மாணவர்களுக்கு விருதுகளையும் வழங்கி, மாணவர்கள் சிறு வயதில் இருந்து நல்லொழுக்கங்களை கற்றறிய வேண்டும். உதாரணமாக, குப்பைகளை வெளியில் தூக்கி எறியாமல் குப்பை கூடை அல்லது தொட்டிகளில் போட வேண்டும். கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். விரல்களின் நகங்களை வளர்க்காமல் அவ்வப்போது வெட்ட வேண்டும். இவையெல்லாம் சிறுவயதிலிருந்தே பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய ஒரு பழக்கமாகும். மேலும், பொது இடங்களில் சிறுநீர் மற்றும் மலம் கழிப்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும், அனைவரும் கழிப்பிடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பிடம் கட்டுவது அவசியமான ஒன்று, நம் மாவட்டத்தை பொருத்தவரை 100 சதவீதம் கழிப்பிடம் கட்டுவது நமது இலக்காகும். மேலும் முக்கியமாக போதைப்பொருள்கள், மதுபழக்கங்களுக்கு எதிராக மாணவர்கள் இருக்க வேண்டும். மாணவர்கள் கைப்பேசி மற்றும் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியம் வடக்கு பனையூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்ற கண்காட்சியினையும், இல்லம் தேடிக்கல்வி உபக்கரண கண்காட்சி மற்றும் கீழ்வேளுர் வட்டம் சிந்தாமணி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தொடு திரை கணிணி வகுப்பினையும் தொடங்கி வைத்து. தொடுதிரை வகுப்பினால் மாணவர்கள் கல்வி திறன் மேம்பாடு அதிகரிக்கும், கற்றலுக்கு எளிமையாக இருக்கும், மாணவர்கள் தங்களுக்கு தேவையான பாடம் குறித்த விளக்கத்தினை மிகவும் துல்லியமாக அறிந்து கொள்ள உதவும். உலகளவில் கல்வி குறித்த தகவல்களை தொடுதிரை மூலம் தெரிந்துக்கொள்ளலாம். இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திகொண்டு தங்கள் திறனை வளர்த்து கொள்ள வேண்டும். சுமார் ரூ.1.80 இலட்சம் மதிப்பிலான இந்த தொடுதிரையினால் இப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் வழி கல்வி பயிலும் சுமார் 62 மாணவ மாணவிகள் பயன் பெறுகின்றனர். என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
முன்னதாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியம் சிகார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஏர்முனை பசுமை கரங்கள் அமைப்பு சார்பில் குறுங்காடு அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ஆறுகளில் உள்நாட்டு மீன் வளத்தினை பெருக்கிடவும், ஆற்று மீன் பிடிப்பினை நம்பியுள்ள உள்நாட்டு மீனவர்களுக்கு வாழ்வாதாரத்தினை பெருக்கிடவும் மற்றும் அருகில் வரும் நாட்டின மீன் இனங்களை பாதுகாத்திடவும், நாட்டின மீன் இனங்களான கட்லா, ரோகு மற்றும் மிர்கால் இன 2000 மீன் குஞ்சுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர்களால் கீழ்வேளுர் வட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள கடுவையாற்றில் விடப்பட்டது.
இவ்விழாவில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் இரா.ஷெர்லின் விமல், கீழ்வேளுர் வட்டார கல்வி அலுவலர்கள் சி.மணிகண்டன், வே.சிவக்குமார், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் ச.ரிஜிவானா பேகம், பள்ளி தலைமையாசிரியர், மாணவ-மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

