தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களுக்கு 40 சப் இன்ஸ்பெக்டர்களை நியமனம் செய்து எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்று பயிற்சி முடித்த 28 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், பதவி உயர்வு பெற்ற 12 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமை தாங்கி சப்-இன்ஸ்பெக்டர்களை பணி நியமனம் செய்து உத்தரவிட்டார்.
அதன்படி ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்துக்கு பெபின் செல்வ பிரிட்டோ, தட்டார்மடம் முகமது ரஷீக், தென்பாகம் முகிலரசன் மற்றும் முத்தமிழரசன், திருச்செந்தூர் தாலுகா ராமச்சந்திரன், தூத்துக்குடி வடபாகம் ரத்தினவேல் பாண்டியன், குலசேகரகன் பட்டினம் சதீஷ், ஆத்தூர் செல்வகுமார், கோவில்பட்டி மேற்கு செந்தில்குமார், மெஞ்ஞானபுரம் சண்முகராஜ், தாளமுத்துநகர் சண்முகசுந்தரம்,
சிப்காட் சண்முகம், ஏரல் சுப்பிரமணியன், விளாத்திகுளம் சுதாகர், முத்தையாபுரம் சுந்தர், ஆறுமுகநேரி தமிழ்செல்வன், வேல்பாண்டியன், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு அபிராமி, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு அனுசியா, கோவில்பட்டி மேற்கு ஆரோக்கிய ஜென்ஸி, கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு காயத்ரி, தூத்துக்குடி அனைத்து மகளிர் ஜூடித் கிருபா, மாவட்ட குற்றப்பிரிவு நிவேதா, ஸ்ரீவைகுண்டம் ரேணுகா, திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் சந்தனமாரி, தட்டப்பாறை சகிலா ஷானி, புதூர் சுகந்தி, எட்டயபுரம் வசந்தி ஆகியோரும்,
தூத்துக்குடி வடபாகம் ரவிச்சந்திரன், திருச்செந்தூர் கோவில் சுரேஷ், தென்பாகம் ஸ்டான்லி ஜான், நாசரேத் வைகுண்டதாஸ், தட்டார்மடம் நடராஜபிள்ளை, தெர்மல்நகர் ரிச்சர்ட் ஜோசப், ஓட்டப்பிடாரம் விஜயகுமார், சூரங்குடி பொன்னுமுனியசாமி, காடல்குடி மாரிமுத்து, மாசார்பட்டி முருகதாஸ், எட்டயபுரம் நீலகண்டன், விளாத்திகுளம் முருகேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். நிகழ்ச்சியில் போலீஸ் துறை அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரி குமார், அலுவலக கண்காணிப்பாளர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

