நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் ஆட்சிமொழிச் சட்ட வாரவிழாவினை முன்னிட்டு நாகப்பட்டினம் அவுரித்திடலில் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் அமைத்திடுவதற்கான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நாகப்பட்டினம் மார்ச் 07

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பெற்ற 27.12.1956 ஆம் நாளை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்ட வாரமாகக் கொண்டாடப்பெறுதல் வேண்டும் என்று தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டது. அதனடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்டவார விழா 01.03.2023 ஆம் நாளன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆட்சிமொழி சட்ட வாரவிழாவின் ஆறாம் நாளான இன்று நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவுரித்திடலில் நடைபெற்ற வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் அமைத்திடுவதற்கான விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியில் இடம்பெற்ற கல்லூரி மாணவ, மாணவி;களின் சிலம்பம், பரதநாட்டியம், பண்பாட்டுக் கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
மேலும், வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் அமைத்திடுவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவுரித்திடல் முதல் அரசு மருத்துவமனை, அண்ணாசாலை, தேரடி, கடைத்தெரு, நாலுகால் மண்டபம் வழியாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் வரையிலான கல்லூரி மாணவ, மாணவி;களின் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தமிழ் வாழ்க என முழக்கமிட்டு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் இரா. அன்பரசி கல்லூரி மாணவ, மாணவிகள், வணிக நிறுவன உரிமையாளர்கள், தமிழார்வலர்கள், தமிழறிஞர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.