தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகரில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டு வருகிறது. மக்கள் தொகை அதிகரிப்பும், வாகன பெருக்கமும் இருப்பதால் போக்குவரத்து சீர்செய்யும் வகையில் பேருந்து நிலையம் ரவுண்டானா, சிதம்பர நகர் சந்திப்பு ஆகிய இரு இடங்களில் புதிய போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.
மறைந்த தூத்துக்குடி முன்னாள் எம்எல்ஏ என்.பெரியசாமி அறக்கட்டளையின் சார்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல் மற்றும் கண்காணிப்புக்குரியவை தொடக்க விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். இரு இடங்களிலும் போக்குவரத்து சிக்னலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார்.
விழாவில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட எஸ்.பி. பாலாஜிசரவணன், சப்-கலெக்டர் கௌரவ்குமார், டிஎஸ்பி சத்தியராஜ், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணைச் செயலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கஸ்தூரி தங்கம், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மோகன் தாஸ் சாமுவேல், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பிரதீப், ராமர், அந்தோணி கண்ணன், பார்வதி, மாநகர அணி அமைப்பாளர் முருகஇசக்கி, துணை அமைப்பாளர்கள் கிறிஸ்டோபர் விஜயராஜ், அருண்சுந்தர், பால்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் செல்வகுமார், செந்தில்குமார், ராஜ்குமார், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், வட்ட செயலாளர்கள் பாலு, சுப்பையா, செல்வராஜ், ரவீந்திரன், ஜான்சன், கவுன்சிலர்கள் இசக்கிராஜா, விஜயலெட்சுமி, ரிக்டா, மகேஸ்வரி, கற்பககனி, பொன்னப்பன், ரெங்கசாமி, சரவணக்குமார், விஜயக்குமார், ஜாக்குலின்ஜெயா, சுப்புலெட்சுமி, தெய்வேந்திரன், நாகேஸ்வரி, பவானி மார்ஷல், ஜெயசீலி, மரியகீதா, ஜான், ரெக்ஸ்லின், தொழில்சங்க தலைவர் மரியதாஸ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், அல்பட், மணி, ரேவதி, டோலி, கன்னிமரியாள், சந்தனமாரி, சத்யா, பெல்லா, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஆறுமுகநயினார், போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், உதவி ஆய்வாளர் வெங்கடேசன், மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் சண்முகம், மண்டல தலைவர் சேகர், பெரியசாமி அறக்கட்டளை இயக்குநர் ஜீவன் ஜேக்கப் மற்றும், சுதன் கீலர், சுதா சுதன், மகிழ் ஜான், கீர்த்தனா மகிழ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

