நாகப்பட்டினம் மாவட்டம்
தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ஏ.டி.எம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நாகப்பட்டினம் பிப்ரவரி 19
நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ஏ.டி.எம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ்,நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் தகுதியான இளைஞர்களுக்கு தகுதி மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப தகுதியான வேலைவாய்ப்பு அல்லது சுய தொழில் செய்வதற்கு வழிவகை ஏற்படுத்தி தர இளைஞர் திறன் திருவிழாவானது நடத்தப்படுகிறது.
இன்றைய தினம் நடைபெற்ற இவ்வேலைவாய்ப்பு முகாமில் 90-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்றனர். இம்முகாமில் வேலை வாய்ப்பை பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வேலை வாய்ப்பினை பெற இயலாதவர்கள் மனம் தளராமல் மீண்டும் முயற்ச்சித்து வேலை வாய்ப்பை பெற வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட 2035 நபர்களில் 669 நபர்;களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்திடவும் பயிற்சி நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு தொழில் திறன் சேர்க்கை சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் விபி.நாகைமாலி ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மு.ஹேமலதா, மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநர் எம்.சந்திரன், உதவி திட்ட அலுவலர்கள் பா.பாலன், சீனிவாசன், முருகேசன் அரசு அலுவலர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய்
மச்சோடா.

