தூத்துக்குடி.
தமிழகத்தில் கடைசி முத்துநகர் மாவட்டத்தில் முத்து குளிப்பது யார்? என்று அரசியல்வாதிகள் மத்தியில் பேசுவது உண்டு. வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும், உதவ வேண்டும், என்று நாடிச் சென்றால் பலர் ஒதுங்குவது உண்டு, சிலர் உதவி செய்வது உண்டு. இரண்டையும் செய்பவர்களை பார்ப்பது தற்போதுள்ள காலக் கட்டத்தில் அதிசயமாகத் தான் இருக்கும்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், 60வது வார்டுகளை கொண்ட தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றுவது என்பது பார்ப்பவர்களுக்கு எளிதாக தெரியும். ஆனால், கல், முள் என கரடுமுரடான பாதை என்பதை அதில் அமர்ந்து பணியாற்றுபவர்களுக்குத் தான் தெரியும். ஊராட்சியாக இருந்த 5 பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் குடியிருக்கும் அனைவருக்கும் தேவையான முழு கட்டமைப்பு பணிகளையும் செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு மாநகராட்சியையே சாரும், என்பதை உணர்ந்து பணியாற்ற எல்லோருக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், அதிலும் மனித நேயத்தோடு, நாட்டின் வளர்ச்சிக்கு அக்கறையோடு பணியாற்றுபவர்கள் கிடைப்பது அரிது.
இந்த சூழ்நிலையில் மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற பின் பல மாற்றங்களை நோக்கி திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, கட்டமைப்புகளை உருவாக்கி கடமை உணர்வோடு பணியாற்றி வருகிறார். அவருக்கு துணையாக ஆணையர், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் என பலர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வரும் சரவணனுக்கு கூடுதல் பொறுப்பாக மாநகராட்சி பொறியாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உதவி செயற்பொறியாளராக இருந்த காலக் கட்டத்தில் 60 வார்டுகளிலும் அனைத்து கவுன்சிலர்கள் வைக்கும் கோரிக்கைகளை கனிவோடு கேட்டு, இல்லையென்று சொல்லாமல் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவி புரிந்து, பணிவோடு பணியாற்றும் சரவணன் மீது கூடுதல் நம்பிக்கை வைத்து மேலும் மாநகராட்சி வளர்ச்சி அடைவதற்கான பணிகளை மேற்கொள்ள பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.எல்லோரிடத்திலும் சிரித்த முகத்துடன் எளிமையாக பழகி, அனைத்து தரப்பு மக்களும் மேன்மையடைய வேண்டும் என்று அயராது பணியாற்றும் இவரைப் போன்ற அதிகாரிகள் தூத்துக்குடி மாநகராட்சிக்கு கிடைக்கப்பெற்றது பெரிய வரப்பிரசாதம் ஆகும். கடமைக்கு பணியாற்றாமல் கடமை உணர்வோடு, பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்பதே அதிகாரிகளின்; எதிர்பார்ப்பாக இருக்கிறது.

