நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டம் முப்பத்திகோட்டகம் கிராமம் முதல் திருவாரூர் என்ற வழித்தடத்தில் பேருந்து வசதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இன்று இன்று தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் பிப்ரவரி 15
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டம் முப்பத்திகோட்டகம் கிராமம் முதல் திருவாரூர் என்ற வழித்தடத்தில் பேருந்து வசதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் கீழ்வேளுர் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி. நாகை மாலி ஆகியோர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது.மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஏழை எளிய மக்களுக்கென பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பெற்ற உடனே பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தினார்கள். அதனைத்தொடர்ந்து கீழ்வேளுர் தொகுதிக்குட்பட்ட முப்பத்திகோட்டகம், தெற்குபனையூர் கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் போக்குவரத்திற்கு வழிவகை செய்யும் வகையில் தெற்குபனையூர் கிராமத்தில் இருந்து கீழ்வேளுர், திருவாரூர், புதிய வழித்தடத்தில் பெண்களின் நலன் கருதி இலவச பயணம் செய்யும் வகையில் நகர பேருந்து இயக்கப்படுகிறது.இப்பேருந்து கீழ்வேளுரில் இருந்து முப்பத்திகோட்டகத்திற்கு காலை 07.45 மணிக்கும், முப்பத்திகோட்டகத்திலிருந்து – திருவாரூக்கு காலை 08.20 மணிக்கும், திருவாரூரிலிருந்து – முப்பத்திகோட்டகத்திற்கு மாலை 4.30 மணிக்கும், முப்பத்திகோட்டகத்திலிருந்து திருவாரூக்கு மாலை 06.00 மணிக்கும், என நாள் ஒன்றுக்கு 4 முறை இயக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பக்கோணம் பொதுமேலாளர் கே.இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

