நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் ஆயக்காரன்புலம்-3 ஊராட்சியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்கம் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்கம் (ஆல்பெண்டசோல்) மாத்திரைகளை வழங்கினார்.
வேதாரணியம் பிப்ரவரி 14
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் ஆயக்காரன்புலம்-3 ஊராட்சியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்கம் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் ஆல்பெண்டசோல் மாத்திரைகளை வழங்கினார்.
தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் 14.02.2023 இன்று நடைபெற்றது. இன்றைய தினம் விடுபட்டவர்களுக்கு 21.02.2023 அன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது. 1-2 வயதுடையவர்களுக்கு அல்பெண்டாசோல் ½ மாத்திரை(200அப) 2-19 வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் 20-30 வயதுடைய மகளிருக்கு அல்பெண்டாசோல் 1 மாத்திரை (400 அப) வழங்கப்படும்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமில் 01-19 வயதுடைய 233201 குழந்தைகளுக்கும் 20-30 வயதுடைய 49622 மகளிருக்கும் சுமார் 282823 மாத்திரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை சுகாதார மையங்கள் அங்கன்வாடி மையங்கள் பள்ளிகள் கல்லூரிகள் மூலம் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும் எனவும், இம்முகாம் மூலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து 1-19 வயதுடைய குழந்தைகள் மற்றும் 20-30 வயதுடைய மகளிர் அனைவரும் பயன்பெறுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண்தம்புராஜ், தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, இம்முகாமில் தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாணவிகள், தலைமையாசிரியர், ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் அரசு அலுவலர்கள் என அனைவரும் எடுத்துக்கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.கே.சி.சுபாஷினி, ஆயக்காரன்புலம்-3 ஊராட்சி மன்ற தலைவர், வட்டார மருத்துவர். மரு.சுந்தரராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், தலைமையாசிரியர், ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

