நாகப்பட்டினம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவுரித்திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஓயா உழைப்பின் ஓராண்டு – கடைகோடி தமிழரின் கனவுகளை தாங்கி தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி இரண்டாம் நாள் விழா நடைபெற்றது.
நாகப்பட்டினம் பிப்ரவரி 1
நாகப்பட்டினம் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஓயா உழைப்பின் ஓராண்டு- கடைகோடி தமிழரின் கனவுகளை தாங்கி என்ற தலைப்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை 30.01.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டு 10 நாட்கள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் நாள்; நிகழ்ச்சியில் மாணவ – மாணவியர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கலைக்குழு பறையாட்டம், ஒயிலாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், பல்வேறு துறை சார்பில் அரசு துறைகளை ஒருங்கிணைத்து அரசின் சாதனைகள் மற்றும் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து வைக்கப்பட்டுள்ள துறை சார்ந்த கண்காட்சி அரங்குகள் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டு தமிழக அரசின் திட்டங்களை தெளிவாக தெரிந்து கொள்ள ஏதுவாக இந்த கண்காட்சியானது அமைகின்றது.
இந்நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தினை வழங்கினார்.
இவ்விழாவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

