ஜேசிஐ பேர்ல்சிட்டி குயின்பீஸ் தலைவர் JFM வழக்கறிஞர் V. சுபாசினி தேசிய கொடியை ஏற்றினார். கொடியேற்றம் நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தேசபக்தி நடனம், தேசபக்தி பாடல்கள், கட்டுரைப் போட்டி, சொற்பொழிவு மற்றும் வினாடி வினா போட்டிகளில் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இந்நிகழ்வுகளை விரிவாக்க நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி ஜி.ரமணி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். ஜேகாம் சார்டர் செயலாளர் JCI Sen எம். முகமது இப்ராகிம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பியர்ல் சிட்டி குயின் பீஸ் செயலாளர் JC HGF அ. ஆயிஷா இப்ராஹிம் மற்றும் பொருளாளர் Jc M. லட்சுமி முத்துராமன மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் பங்குகொண்ட மாணவர்களுக்கு தலைவர் பரிசுகள் வழங்கினார்.

