நாகப்பட்டினம் ஜனவரி 24
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் சோழவித்தியாபுரம் ஊராட்சியில் உள்ள தூய அன்னாள் நடுநிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் (வட்டார அளவிலான சுகாதார பெருவிழா) கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் குத்துவிக்கேற்றி தொடங்கி வைத்தை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர்
நாகை வி.பி.மாலி ஆகியோர் பார்வையிட்டனர். கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் – சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றாகும். தற்போது, இம்முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கு பெற்று பயன்பெறுவர்.
மேலும், இம்முகாமில் சிறப்பு மருத்துவமாக பொது மருத்துவம், குழந்தை மருத்துவம், தோல் சிகிச்சை மருத்துவம், எலும்பு சிகிச்சை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், மனநல மருத்துவம், காது,மூக்கு,தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், சர்க்கரை அளவு பரிசோதனை, டீP பரிசோதனை, கொலஸ்ட்டால் பரிசோதனை, அறுவை சிகிச்சை தொடர்பான மருத்துவம், கண் மருத்துவம், சித்த மருத்தவம், காசநோய் மருத்துவம், தொழு நோய் சிகிச்சை மருத்துவம், ஸ்கேன் பரிசோதனை, இசிஜி பரிசோதனை, கொரோனா தடுப்பூசி, கொரேனா பரிசோதனை, டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ திட்ட பதிவு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு தி;ட்ட பதிவு போன்றவை சிறப்புற நடைபெற்றது. கீழையூர் வட்டாரம் 95954 மக்கள் தொகையை கொண்டுள்ளது. இதில் 16 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. 55 கிராமங்களை உள்ளடக்கிய இந்த வட்டாரத்தில் தொற்றா நோய் பிரிவு 18 வயதிற்கு மேற்றபட்ட அனைவரையும் பரிசோதனை செய்து 8053 இரத்த கொதிப்பு மற்றும் 4738 சர்க்கரை நோய் உள்ள நோயாளிகளையும் கண்டறிந்து, 2303 சர்க்கரை மற்றும் இரத்த கொதிப்பு நோய் உடைய நோயளிகளுக்கு 2 மாதத்திற்கு தேவையான மாத்திரை மருந்துகளை மருத்துவமனைகளிலும் அவர்களுடைய வீடு தேடி சென்றும்( மக்களை தேடி மருத்துவம்) மூலமாக வழங்கப்படுகிறது. மேலும் நீண்டகால ஆதரவு சிகிச்சை மூலமாக 1612 பயனாளிகளுக்கும்,முட நீக்கியல் பிரிவு மூலமாக 446 பயனாளிகளுக்கும் அவர்களுடைய வீடு தேடி சென்று மருத்துவ பயன் பெற்று வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு சத்துணவு பெட்டகம், காசநோய் மருத்துவ பயனாளிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம் போன்றவைகள் வழங்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. விஸ்வநாதன், துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு. ப.விஜயகுமார், இணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு. ஜோஸ்பின் அமுதா, வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா, கீழையூர் ஒன்றிய குழு தலைவர் செல்வராணி, வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத்தலைவர் ஆ.தாமஸ்ஆல்வா எடிசன், ஊராட்சி மன்ற தலைவர் கோமதி தமிழ்ச்செல்வம், திருப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் மரு.அரவிந்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

