நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், மருத்துவம் – மக்கள் நல்வாhழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையில் மாநிலத்தில் முதல் இடம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களை பாராட்டி விருது வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
நாகப்பட்டினம் ஜனவரி 09
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், மருத்துவம் – மக்கள் நல்வாhழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையில் மாநிலத்தில் முதல் இடம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களை பாராட்டி விருது வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றுது.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது:
மருத்துவத்துறையில் பணிபுரிவது என்பது மகத்தான செயல், இதை ஒரு வேலை எனக்கு கருதாமல் ஒரு சேவையாக நினைத்து பணி புரிய வேண்டும். அப்பணியின் போது சிறப்பாக செயல்படுவதற்காக ஒரு சிலர் வாழ்த்தும் போது அடிமையாகாமலும், எதையும் எதிர்பார்க்காமல் தனது பணியை கடமையுடன் செய்து முடிப்பதே சிறந்த சேவையாக கருதப்படுகிறது. அதன்படி ஒரு சேவை செய்யும் பொழுது அதற்கான நற்பலன் கிடைக்கும் என எதிர்பார்த்து செய்வது மிகவும் தவறான விஷயமாகும்.

அதன்படி ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையில் மாநில அளவில் 142 எண்ணிக்கை சாதனை என்பது ஒரு வகையான கூட்டு முயற்சி, இதற்கான இலக்கை அடைவதற்கு மிகவும் அரும்பாடுபட்டு அதிக அளவில் அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட அறுவை சிகிச்சை மருத்துவர்கள், அதிக அளவில் ஊக்குவிப்பு செய்திட காரணமாக இருந்த மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் நான் மனதார பாராட்டுகிறேன், மேன்மேலும் இதுபோன்று பல பணிகளில் மென்மேலும் உயர்ந்து பல இலக்கை அடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
நாகப்பட்டினம் மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பாக ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையில் எண்ணிக்கை சாதனை செய்து முதல் இடம் பிடிப்பதற்கு உறுதுணையாக இருந்த மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களை பாராட்டி பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.வி.விஸ்வநாதன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு. விஜயகுமார், இணை இயக்குநர் நலப்பணிகள் மரு.ஜோ.ஜோஸ்பின் அமுதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

