நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் முழு கரும்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கினார்.
நாகப்பட்டினம் ஜனவரி 09
நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் முழு கரும்பு வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தலைமையில், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் வகையில், மக்களை தேடி எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 2023-ம் ஆண்டு தமிழர் திருநாளான தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை கடற்கரைசாலை, சத்யா நகரில் உள்ள நியாயவிலைக் கடையில் இன்று தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் நடைபெற்ற அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் முழு கரும்பினை கரும்பு வழங்கும் விழாவில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 367 நியாய விலை கடைகள் உள்ளன. 2,17,496 குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் ரொக்க பணம் ரூ.1000 பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் வருகின்ற 13ஆம் தேதி வரை வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பை பெறாதவர்கள் பொங்கள் பண்டிகை முடிந்தும் பெற்றுக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு 200 டோக்கன் என்ற முறையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு அதனடிப்படையில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இவ்விழாவில்; மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் க.பா.அருளரசு, ஊராட்சி ஒன்றிய தலைவர் வே.அனுசியா, மாவட்ட வழங்கல் அலுவலர் தெய்வநாயகி, பொரவச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் எம்.கோமதி, பொரவச்சேரி ஊராட்சி மன்ற உறுப்பினர் எஸ்.ரேணுகாதேவி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

