தூத்துக்குடி.
தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் சென்னை, அன்னை சத்யா நகர் ரேஷன் கடையில் துவக்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள, 2.19 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து, இலவச வேட்டி, சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, மற்றும் ஆயிரம் ரூபாயை வழங்கினார். பொங்கல் தொகுப்புகளை முதல்வர் துவக்கி வைத்து அதே நேரத்தில் தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட்டது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கூட்டுறவு கடன் சங்க நியாயவிலைக்கடையில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவரும், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் பொங்கல் தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
இதே போல் அப்பகுதியில் உள்ள டேவிஸ்புரம், தாளமுத்துநகர், அழகாபுரி, சிலுவைபட்டி, சமீர்வியாஸ்நகர், மாதாநகர், பூபாண்டியாபுரம், சோட்டையன் தோப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் இத்திட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பாலமுருகன், துணைத் தலைவர் சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஸ்பாலன், தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் ஜெஸிந்தா, கிளைச் செயலாளர்கள் காமராஜ், மகாராஜன், அன்பு, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்த குமார் மற்றும் கௌதம், சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

