நாகப்பட்டினம் ஜனவரி 7
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருமருகல் ஊராட்சி ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் புதிதாக வீடுகள் கட்டும் கட்டுமானப் பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.5.77 இலட்சம் மதிப்பீட்டில் மிதிவண்டி நிலையம் அமைக்கும் பணி மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ரூ.1.57 இலட்சம் மதிப்பீட்டில் ஆசிரியர் கழிவறை அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும், கட்டுமாவடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக் கட்டடம் மற்றும் ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஏர்வாடி ஊராட்சியில் ரூ.10.76 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி மற்றும் ரூ.4.35 இலட்சம் மதிப்பீட்டில் நெற்கலம் அமைக்கும் பணியையும், திருப்புகலூர் ஊராட்சியில் ரூ.4.64 இலட்சம் மதிப்பீட்டில் மேலப்பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி மற்றும் ரூ.4.65 இலட்சம் மதிப்பீட்டில் நெற்கலம் அமைக்கும் பணியையும், கோட்டூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பள்ளி கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் திருப்புகலூர் ஊராட்சியில் ரூ.12.62 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுமான பணிகளையும், கோட்டூர் ஊராட்சியில் ரூ.14.59 இலட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை கட்டிடம் கட்டும் பணிகளையும், கீழ பூதனூர் ஊராட்சியில்; ரூ.28.34 இலட்சம் மதிப்பீட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் பணி நடைபெறுவதையும், பில்லாளி ஊராட்சியில்; ரூ.28.34 இலட்சம் மதிப்பீட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் பணி நடைபெறுவதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கீழ பூதனூர் ஊராட்சியில் மேல பூதனூர் கோவில் தெரு சாலையை ரூ.2.13 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஏர்வாடி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பழுதடைந்த வகுப்பறை கட்டடங்களையும்,விச்சூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெறுவதையும், ஏர்வாடி ஊராட்சியில் உள்ள நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் என்.பசுபதி, திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.ஜவகர், எஸ்.பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

