தூத்துக்குடி.
திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி பிறந்த நாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அரங்கில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார்.
மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்: திமுகவை பொறுத்தவரை தலைவர் கலைஞர், முதலமைச்சர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, நமது எம்.பி. கனிமொழி ஆகியோர்களது பிறந்த நாளை ஆடம்பரமின்றி மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆண்டு தோறும் செய்து வருகிறோம். அதுபோல் தையல் மிஷின் 43, சைக்கிள் 7, இஸ்திரி பெட்டி 6, ஹாட் பாக்ஸ், ஊனமுற்ற ஒருவருக்கு செயற்கை கால், தென்மாநில அளவில் ராமநாதபுரம், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் விளையாட்டுத்துறையில் பங்குபெற்றுள்ள அனைத்து மாணவ-மாணவியர்கள் 100 பேருக்கு ஷூ மற்றும் விளையாட்டு உபகரணப் பொருட்கள் உட்பட ரூ.10 லட்சம் மதிப்பில் இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன.
கனிமொழி எம்.பி.யை பொறுத்தவரை பொதுமக்களின் எல்லா கோரிக்கைகளையுமே நிறைவேற்ற வேண்டும். அவர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பது, இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி பேசுவது, தமிழர்களின் நலனைப் பற்றி சிந்திப்பது என அனைத்திலும், நல்ல திறமை வாய்ந்த ஒரு எம்.பி.யை நாம் பெற்றுள்ளோம். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு படி அவரது வழியில் எம்.பி., எம்.எல்.ஏ, மேயர் என அனைவரும் மக்கள் பணியாற்றி வருகிறோம். அனைவருக்கும் உதவி செய்வதில் திமுக எப்போதுமே முன்னுதாரணமாக இருந்து செயலாற்றி வருகிறது. வரும் காலத்திலும், இதுபோன்ற பணிகள் தொடரும். அனைவரும் முதல்வருக்கு துணை நிற்க வேண்டும் என்றார்.
மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திமுக எப்பொழுதும் மக்களுக்காக தலைவர் வழியில் உழைத்துக் கொண்டே நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் திமுகவிற்கு நிகர் திமுக தான். இங்கு கலைஞர் ஆட்சியில் தான் மருத்துவ கல்லூரி, பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பல கொண்டு வரப்பட்டன. அதன் மூலம் பலனடைந்து வருகின்ற மக்கள். இதை சீர்குழைக்கும் வகையில் அன்னிய சக்திகள் ஊடுருவி உள்ளனர். நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். 40 தொகுதிகளிலும், வரும் காலங்களில் நாம் வெற்றி பெற வேண்டும். முதல்வர் உத்தரவுபடி அனைவரும் பணியாற்றுவோம் என்று பேசினார்.


விழாவில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலெட்சுமி, கலைச்செல்வி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ் மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, மாநகர துணைச் செயலாளர்கள் கீதா முருகேசன், பிரமிளா, கனகராஜ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், ரமேஷ், கஸ்தூரி தங்கம், உமா தேவி, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, சேசையா, மாநகர அணி அமைப்பாளர்கள் ஜெயக்கனி, டேனி, துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், அருண்சுந்தர், ஆர்தர் மச்சாது, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், மேகநாதன், ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வகுமார், செந்தில்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், முத்துவேல், வைதேகி, ஜான்சிராணி, ஜாக்குலின்ஜெயா, ராமுத்தம்மாள், விஜயலெட்சுமி, பவானி மார்ஷல், ராஜேந்திரன், ரெக்ஸ்லின், வட்டச்செயலாளர்கள் டென்சிங், பாலு, சுப்பையா, மூக்கையா, செல்வராஜ், சதீஸ்குமார், கருப்பசாமி, ரவீந்திரன், சுரேஷ், கதிரேசன், பகுதி இளைஞரணி அமைப்பாளர்கள் ரவி, சூர்யா, நிர்வாகிகள் கருணா, அல்பர்ட், மணி, ஜோஸ்பர், மகேஸ்வரன்சிங், மகளிரணி சந்தனமாரி, ரேவதி, சத்யா, கவிதாதேவி, பெல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

