அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி.
2023ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறப்பை இந்தியா உட்பட பல வெளிநாடுகளிலும் வாழும் இந்தியர்கள், தமிழர்கள் கொண்டாடுவது வழக்கமான நடைமுறையில் இருந்து வருகின்றனர். ஒருவருக்கொருவர் சந்தித்து அன்பை பரிமாறிக்கொண்டு பழைய நட்பையும், புத்தாண்டில் புதுப்பித்துக் கொண்டு புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனை அவரது இல்லத்தில் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், தெற்கு மாவட்ட திமுக சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், இந்திரா நகர் கிளைக்கழக செயலாளர் பொன்னுச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், கிளைச் செயலாளர் காமராஜ், குமரன் நகர் கிளைச் செயலாளர் கணேசன் மற்றும் கௌதம் உட்பட பலர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

