நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் மாவட்ட காசநோய் மையம் இணைந்து ஒ.என்.ஜி.சி.நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட காசநோயை கண்டுபிடிக்கும் கருவி துவக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
நாகப்பட்டினம் டிசம்பர் 30
நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் மாவட்ட காசநோய் மையம் இணைந்து ஒ.என்.ஜி.சி.நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட காசநோயை கண்டுபிடிக்கும் கருவி துவக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது :
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொதுவாக காச நோய் செயல்பாடு கட்டுக்குள் உள்ளது. கடந்த ஆண்டு காசநோய் கட்டுக்குள் இருக்கும் மாவட்டங்களில் நம் மாவட்டம் முதன்மையாக இருந்தது. தற்போது, காசநோயின் தொற்றுகளை எளிதில் கண்டறியும் வகையில் ரூ. 4,35,000 மதிப்பீடு கொண்ட காசநோயை கண்டுபிடிக்கும் கருவியை, ஒ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதி மூலம் நமது தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.மேலும், காசநோயின் தொற்றுகளை எளிதில் கண்டறிந்து, உரிய மருந்து மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் இதனை கட்டுக்குள் கொண்டு வர முடியும். இந்த காசநோயானது சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமை போன்ற நபர்களுக்கு எளிதில் பரவும் தன்மை கொண்டது. ஆகவே இந்த நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக தாமாகவே முன்வந்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் பொதுமக்களிடம் இந்நோய் குறித்து போதுமான வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் மக்களைத்தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்-ரே வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ. அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இவ்விழவில் துணை இயக்குனர் மருத்துவப்பணிகள்(காசநோய்) மரு.பி.சங்கீதா, ஒ.என்.ஜி.சி. நிறுவனம் நிரவி மேலாளர்களான அனுராக், பி.என்.மாறன், ஆர்.ரவிக்குமார், ஒ.என்.ஜி.சி. நிறுவனம் நிரவி சி.எஸ்.ஆர்(பொ) விஜய்கண்ணன், மரு.பி.கே.ஆனந்த் பிரபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

