• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

குழப்பத்தை ஏற்படுத்தி குட்டையில் மீன்பிடிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு இடம் அளிக்க கூடாது அமைச்சர் கீதாஜீவன் கடும் தாக்கு

policeseithitv by policeseithitv
December 24, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
குழப்பத்தை ஏற்படுத்தி குட்டையில் மீன்பிடிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு இடம் அளிக்க கூடாது அமைச்சர் கீதாஜீவன் கடும் தாக்கு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் சண்முகபுரம், அண்ணாநகர் ஆகிய இரு இடங்களில் நடைபெற்றது.

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக தலைவர் கலைஞருடன் மாணவ பருவமுதல் பேராசிரியர் அன்பழகன் நட்புக்கொண்டு கொள்கைப்பிடிப்போடு சுய மரியாதையுடன் பல நூல்களை எழுதினார். அதற்கு பெருமை சேர்க்கும் நூற்றாண்டு பணியை பாராட்டும் வகையில் கல்வி இயக்க வளாகத்திற்கு அன்பழகன் பெயர் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. பெரியார் அண்ணா கலைஞர் என 50 ஆண்டு நட்பு கருத்துகளை பரிமாறி ஆதிக்க சக்திகளை எதிர்த்து பணியாற்றினார். நமது மாவட்டத்தில் 3 பெரிய தொழிற்சாலைகள் வரவுள்ளன. அதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளது. விவசாயிகளுக்கு என தனி பட்ஜெட் உள்ளன. திமுக ஆட்சியின் சாதனைகளை நாங்கள் சொல்ல தயார். மோடி ஆட்சியின் சாதனைகளை நீங்கள் சொல்ல தயாரா? வேலை வாய்ப்பு இல்லை உரிமைகள் பறிப்பு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்கு விற்பனை இது தான் உங்கள் சாதனை பல்வேறு கருத்துக்களை கூறி குழப்பத்தை ஏற்படுத்தி குட்டையில் மீன்பிடிக்கலாம் என்று நினைப்பார்கள். அதற்கு நாம் இடம் அளிக்க கூடாது. திமுக ஆட்சியில் கல்வி வேலை வாய்ப்பு மகளிர் என அனைத்து தரப்பினரும் பயன் அடையும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். கர்ப்பினிகளுக்கு ஊட்டச்சத்து என்று தேர்தல் நேரத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் பிஜேபி ஆட்சிக்கு வந்தபோது 480 ஆக இருந்து கேஸ் தற்போது 1200 ஆக உயர்ந்துள்ளது இது எல்லாமே ஏழை எளிய மக்களை முழுமையாக வஞ்சித்து அதானி உள்ளிட்ட கோடிஸ்வரர்கள் வாழ்வதற்கு வழிவகை செய்கிறார் மோடி ஏழைகள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி கிடையாது. கடனை வாங்கிவிட்டு வெளிநாடு செல்கிறார்கள். அதை முழுமையாக தள்ளுபடி செய்கிறார், குறைந்த தொகை வாங்கியவர் வீட்டில் வங்கி அதிகாரிகள் வந்து மிரட்டுகிறார்கள். விவசாயிகள் கடன் தள்ளுபடி இல்லை. இப்படி பல சொல்லலாம். பலர் ஏதோ ஏதேதோ பேசிகிறார்கள். சூரியனை பார்த்து நாய் குரைத்து ஏதுவும் நடக்க போவதில்லை. 2024 தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். என்று பேசினார்.

மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் 9 ஆண்டு பிஜேபி ஆட்சியில் விலைவாசி உயர்வு மக்கள் நலன் பாதிப்பு என அனைத்தும் தொடர்ந்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சமி, முதலமைச்சராக இருந்து பணியாற்றியுள்ளனர். என்ன சாதனை செய்தார்கள். ஒன்றும் கிடையாது. மாநில அரசு பங்களிப்பு இல்லாமல் எந்த திட்டமும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த முடியாது. இப்படி தான் சில பணிகள் இங்கு நடைபெறுகிறது. தூத்துக்குடியில் எத்தனை புதிய பணிகள் நடைபெற்றுள்ளது. நடைபெறுகிறது என்பதை கண் கூடாக பார்க்கலாம் தளபதி அனைவரையும் அரவணைத்து செல்லும் முதல்வராக பணியாற்றி மக்கள் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். கிறிஸ்துமஸ் விழா நடத்தியவர்கள் உங்களது ஆட்சியில் சாதனைகளையும் கொள்கைகளையும் சொல்லி விட்டு சென்றிருக்க வேண்டும் அதை விடுத்து தேவையில்லாமல் கருத்துகள் கூறி அமைச்சர் காலை வெட்டுவேன், நாக்கை அருப்பேன், என்று பேசுவது என்ன நாகரீகம் எங்களுக்கும் செய்ய தெரியாதா என்ன எங்கள் ஆட்சி நடைபெறுகிறது. காவல்துறை முதலமைச்சர் வசம் உள்ளது. என்பதால் பொருமையாக இருக்கிறோம் திமுககாரன் எதற்கும் சலைத்தவன் அல்ல. ஒருவர் தவறு செய்தால் அவரை ஓரு முறை மண்ணிப்பது உண்டு அது போல் மண்ணித்து விடுகிறோம். தொடர்ந்து தேவையில்லாமல் பேசினால் நடப்பது வேறு கடமை கண்ணியம் கட்டுபாடு குறையாமல் நடந்து கொள்ள நாங்கள் நினைக்கிறோம் முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் துணை நிற்க வேண்டும். என்று பேசினார்.

மாநில பேச்சாளர் சரத்பாலா பேசுகையில் தாமரை முளைத்துவிட்டது. என்று கூறுகிறார்கள. தேர்தல் களத்துக்கு வாங்க எங்க முளைத்திருக்கிறது என்று பார்ப்போம். நேதாஜி, காந்தி, பெருந்தலைவர் காமராஜர் இவர்களை போன்ற தலைவர்களை எல்லாம் வசைப்பாடி எதிராக செயல்பட்ட கட்சி பிஜேபி, நீங்கள் கொடுத்த வாக்குறுதி 15 லட்சம் இன்னும் வந்த சேரல வங்கி கணக்கில் 2023ல் முதலமைச்சர் அறிவித்த ஆயிரம் உதவித்தொகை அனைவருக்கும் உண்டு தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் கனிமொழிஎம்.பி தான் வேட்பாளராக நிறுத்தப்படுவார். அவரை எதிர்த்து பிரதமர் மோடி போட்டியிட தயாரா எங்கள் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் களம் கண்டு வெற்றிக் கணியை பறிப்போம்.

கூட்டத்தில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட துணைச்செயலளார்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவிந்திரன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோணிஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், அபிராமிநாதன், கஸ்தூரிதங்கம், உமாதேவி, துணை அமைப்பாளர்கள் நலம் ராஜேந்திரன், வக்கீல் சீனிவாசன், அருணாதேவி, ஜீவன்ஜேக்கப், அந்தோணிகண்ணன், சங்கர், ராமர், பார்வதி, சரவணன், கவிதாதேவி, மாநகர அணி அமைப்பாளர்கள் வக்கீல் ஆனந்தகேபரியேல்ராஜ், அருண்குமார், முருகஇசக்கி, ஜெயக்கனி, டேனி, பிரபு, தேவதாஸ், சக்திவேல், சுரேஷ், துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செல்வின், வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், பால்ராஜ், டைகர்வினோத், அருண்சுந்தர், பால்மாரி, ஆர்தர்மச்சாது, சங்கரநாராயணன், பிக்அப் தனபால், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல். சேர்மபாண்டியன், செந்தில்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், பொன்னப்பன், ஜான், வைதேகி, நாகேஸ்வரி, ஜான்சிராணி, விஜயகுமார், ராஜதுரை, ஜெயசீலி, தெய்வேந்திரன், கந்தசாமி, சோமசுந்தரி, பேபி ஏஞ்சலின், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், பாலு, சுப்பையா, வன்னியராஜ், சதீஷ்குமார், செல்வராஜ், ரவிந்திரன், சுரேஷ், சிங்கராஜ், கங்காராஜேஷ், கீதாசெல்வமாரியப்பன், டென்சிங், முத்துராஜா, முக்கையா, பொன்ராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், ஆனந்தராஜ், நவநீதன், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா, ரவி, மகளிர் அணி நிர்வாகிகள் ரேவதி, சத்யா, கன்னிமரியாள், சந்தனமாரி, மற்றும் அல்பட் மணி மகேஸ்வரசிங், ஜெயக்குமார், சிவக்குமார், பிரபாகர், ஜோஸ்பர், உலகநாதன், பாஸ்கர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்தார்.

Next Post

கபடி போட்டியில் காயமுற்ற கபடி வீரருக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் ஆறுதல் கூறினார்

Next Post
கபடி போட்டியில் காயமுற்ற கபடி வீரருக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் ஆறுதல் கூறினார்

கபடி போட்டியில் காயமுற்ற கபடி வீரருக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் ஆறுதல் கூறினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In