நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய அரசின் தரநிர்ணய அமைவனம் சார்பில் தரநிலைகள் குறித்து மாவட்ட அலுவலர்களுடனான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் டிசம்பர் 22
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய அரசின் தரநிர்ணய அமைவனம் சார்பில் தரநிலைகள் குறித்து மாவட்ட அலுவலர்களுடனான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தரமான தயாரிப்புகளை உற்பத்தி செய்வதில் பி.ஐ.எஸ் பங்கு மற்றும் பொறுப்பு, ஐ.எஸ்.ஐ மதிப்பு ரூ ஹால்மார்க் (தங்கம்), மாநில அரசு துறைகளின் கொள்முதல் டெண்டர்களில் இந்திய தரங்களின் முக்கியத்துவம் பற்றிய விளக்கக்காட்சியை வழங்கினார். மாநில அரசாங்கத் துறைகள் தங்கள் கொள்முதல் டெண்டர்களில் குறிக்கப்பட்ட தரமான தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தியது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, இந்திய தரநிர்ணய அமைவனத்தின் இயக்குநர் எஸ்.டி.தயானந்த், இந்திய தரநிர்ணய அமைவனத்தின் உதவி இயக்குநர் வி.ரமேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சு.ராமன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய்
மச்சோடா.