வேதாரண்யம் டிசம்பர் 21
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் வண்டல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நோக்கம் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதாகும். அந்தவகையில் தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறது. அரசு அறிவிக்கும் திட்டங்கள், உதவிகளை பெற அறிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ள மக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திக்கும் ஒரு நிகழ்ச்சியே மக்கள் நேர்காணல் முகாமாகும்.
இம்முகாமின் நோக்கம் அரசின் நலத்திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும். தகுதியின் அடிப்படையில் நலத்திட்டங்கள் தகுதியானவர்களுக்கு கிடைக்க வேண்டும். இதுபோன்ற அரசின் நல திட்டங்கள் மற்றும் உதவிகளை அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் இம்முகாம் நடத்தப்படுகிறதுஇன்றைய தினத்தில் தலைஞாயிறு, அவுரிக்காடு, வண்டல் ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்படவுள்ளது. அவுரிக்காடு, வண்டல் ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுசுவர் அமைப்பதற்கான ஆணைகள் வழங்கப்பட்டு அப்பணிகள் உடனே தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன.

இம்முகாமில் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 01 பயனாளிக்கு ரூ.4,00,000 மதிப்பீட்டில் இயற்கை இடர்பாடுகள் திட்டத்தின் கீழ் இடிதாக்கி இறந்தமைக்கான நிவாரணத்தொகைக்கான ஆணையினையும், சமூகப் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 67 பயனாளிகளுக்கு ரூ.5,99,500 மதிப்பீட்டிலும், வருவாய் துறை சார்பில் 53 பயனாளிகளுக்கு ரூ.3,80,000 மதிப்பீட்டில் இணையவழி பட்டா மாற்றம் மற்றும் இலவச வீட்டுமனை பட்டாக்கான ஆணைகளையும், வட்ட வழங்கல் துறையின் சார்பில் 14 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், வேளாண்மைத்துறை சார்பில் 06 பயனாளிகளுக்கு ரூ.7,660 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.3,000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.1,700 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 07 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், நில அளவை பிரிவு சார்பில் பட்டாக்கான ஆணையினையும், பேரூராட்சி சார்பில் தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கான ஆணையினையும் என மொத்தம் 162 பயனாளிகளுக்கு சுமார் ரூ.13 இலட்சத்து 91 ஆயிரத்து 860 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வி;.ஷகிலா தலைஞாயிறு பேரூராட்சி தலைவர் செந்தமிழ்செல்வி பிச்சையன், தலைஞாயிறு ஆத்மா வட்டார குழுத்தலைவர் மகா.குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர் ஜெயசீலன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உட்பட பொது மக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

