தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் பொதுமக்கள் காலை மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வதற்கும் பொழுதுபோக்கை களிப்பதற்கும் பல்வேறு பூங்காக்கள் இருந்து வருகின்றன. அதில் சில பூங்காக்களில் சிறியவர் முதல் பெரியவர் வரை பயனடையும் வகையில் விளையாட்டு உபகரணங்களும் உடற்பயிற்சிக்கு தேவையான சாதனங்களுடன் பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததை சமூக ஆர்வலர்கள் சுட்டி காட்டியதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தி புதிய மின்விளக்குகள் பேவர் பிளாக் சாலைகள் புல் தரைகள் என பல வண்ண செடிகளுடன் பூத்து குலுங்கும் மலர்களுடன் இயங்கி வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி 2ம் கேட் பகுதியில் உள்ள நீர்தேக்கம் டேங்க் அருகிலுள்ள பூங்காவில் மூலிகை செடிகள் அதிகமாக இருப்பதாக வந்த தகவலை அடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதில்; 329 பல்வேறு வகையான மூலிகை பல வகை செடிகள் இருந்து வருவதை தெரிந்து கொண்ட அவர் இது போன்ற பூங்காக்களை மேலும் நல்ல முறையில் பாராமரிக்க அதிகாரிகளுக்கு உத்திரவிட்டு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் வாக்கிங்டிராக் வசதி முதியோர்கள் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கை வசதி அமைக்க உத்தரவிட்டார்.

ஆய்வின் போது மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், வடக்கு மண்டல சுகாதரா ஆலுவலர் ஹரிகணேஷ், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் பிரபாகர், ஜோஸ்பர், பூங்கா பாராமரிப்பாளர் பாலமுருகன், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

