• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் செம்போடை கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ஊராட்சி நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
December 16, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் செம்போடை கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ஊராட்சி நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் செம்போடை கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ஊராட்சி நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் டிசம்பர் 16

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் செம்போடை கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ஊராட்சி நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ம.பிரதிவிராஜ் உடன் உள்ளார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது. அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் சிறப்பாகவும், முறையாகவும் செயல்படுவதை உறுதி செய்யும் பொருட்டு சில வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. கிராம ஊராட்சி நிர்வாகத்தில் குடும்பத்தினர் உறவினர்கள் தலையீடு மற்றும் கிராம ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் பெண்களாக இருக்கும் கிராம ஊராட்சிகளில், அவர்களை தன்னிச்சையாக செயல்பட விடாமல் கணவர் குடும்பத்தினர் தலையீடு போன்றவற்றை தடுத்து அவர்களை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.கிராம சபை கூட்டம் ஏற்கனவே ஒரு ஆண்டில் 4 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன தற்போது அரசு உத்தரவின்படி கூடுதலாக 2 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனை ஊராட்சி மன்ற தலைவர்கள் மக்களுக்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாக தெரியப்படுத்தி கிராம சபை கூட்டங்கள் உயிரோட்டம் உள்ளவகையில் நடத்தப்பட வேண்டும்.

நெகிழி மேலாண்மை ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் வகையில் உள்ள நெகிழியை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மக்கள் மஞ்சப்பை உபயோகிக்க ஊராட்சி மன்ற தலைவர்கள், தங்கள் ஊராட்சியில் உள்ள மக்களை தயார் படுத்த வேண்டும் மளிகை கடைகளில் நெகிழிப்பைகள் மூலம் பொருட்கள் வழங்குவதைதையும், இறைச்சி கடைகளில் நெகிழிப் பைகளின் உபயோகத்தையும் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும். இறைச்சிக்கடைகள் அதிகம் உள்ள ஊராட்சிகளில் இறைச்சிக்கடைக்காரர்களுடன் ஊராட்சி மன்ற தலைவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் மூலம் கூட்டம் நடத்தி நெகிழிப் பைகளை தீமை குறித்து விளக்குவதும் அதனை தவிர்ப்பதற்கு அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும. மண்டலதுணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் ஆய்வு செய்து நெகிழி பைகள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கவும், அறிவுரைகள் வழங்கப்படவும் வேண்டும். இறைச்சி கடைகளுக்கு செல்லும்போது ஏதேனும் பாத்திரங்கள் எடுத்துச் சென்று இறைச்சி வாங்கிக் கொள்ள ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சி திறந்தவெளி கழிப்பிடத்தை மக்கள் பயன்படுத்தாமல் தங்கள் வீடுகளில் உள்ள கழிவறையை பயன்படுத்த வேண்டும். இதற்கு கழிவறை இல்லாத வீடுகள் இல்லை என்பதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முழுமையான சுகாதாரத்தினை பராமரிக்க அரசு வழங்கும் நிதியினை முறையாக பயன்படுத்த வேண்டும். அனைத்து குடியிருப்புகளுக்கும் தெரு விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டு முறையாக பராமரிக்கப்பட வேண்டும.; இது தொடர்பாக புகார் பதிவேடு ஊராட்சிகளின் பராமரிக்கப்பட வேண்டும் ஊராட்சி சாலைகள் மக்கள் போக்குவரத்திற்கு உகந்த முறையில் ஊராட்சிகளின் நிதி நிலைக்கேற்ப சிறப்பான முறையில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பராமரிக்க வேண்டும். ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆரம்பப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் முறையாக பராமரிக்கப்பட்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். உரிய கால இடைவெளியில் பள்ளி கட்டடங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டியதை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

மாநில அரசு சிறப்பு திட்டமான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நீர் நிலைகள் புனரமைத்தல், குக்கிராமங்களில் தெருக்கள், வீதிகள் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், சமத்துவ சுடுகாடு,இடுகாடு என்று பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளுதல், பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்பாட்டு மற்றும் பொது பயன்பாடு கட்டமைப்புகளை உருவாக்குதல், பசுமை மற்றும் சுத்தமான கிராமம், வாழ்வாதாரம் மற்றும் சந்தைப்படுத்துதல் வசதிகளை ஒருங்கிணைத்தல் போன்ற ஊராட்சிக்கு தேவையான பணிகளை தேர்வு செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.15 ஆவது நிதிக்குழு மான்ய திட்டத்தின் கீழ் 2020-21, 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டு திட்ப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும்.அனைத்து ஊராட்சி வரி வசூல் பணியை கணினி மயமாக்குதல் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மாதம் இருமுறை 5, 20 தேதிகளில் சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீரை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். குடிநீர் குழாய்களில் தண்ணீர் வீணாவதை தடுத்திட வேண்டும். குளோரினேசன் செய்யப்படுவதை உறுதி செய்ய தெரிவிக்க வேண்டும். குடிநீர் தர பரிசோதனை செய்வது குறித்த பயிற்சியினையும் கூட்டத்தில் வழங்க வேண்டும்.

மேலும், தமிழகத்தின் ஊரக பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கிராம உட்கட்டமைப்பு பணிகளில் குடிநீர் விநியோகம் என்பது கிராம ஊராட்சியின் ஓர் கட்டாய கடமையாகவும், குடிநீர் விநியோகத்தினை செயல்படுத்தவும் ஒரு கிராம ஊராட்சியில் தற்போதைய மற்றும் எதிர்கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் தொலைநோக்கு கண்ணோட்டத்துடனும் கிராமக் குடிநீர் விநியோக செயல் திட்டம் தயாரித்தல் அவசியமாகும். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கிராம குடிநீர் விநியோக செயல் திட்டம் தயாரிப்பதன் மூலம் ஒரு கிராம ஊராட்சியின் முக்கிய தேவையான குடிநீர் விநியோகத்தினை சிறப்பாக மேற்கொள்ள முடியும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் முழுமையான கிராமப் குடிநீர் விநியோகத் திட்டத்தின் தயாரிப்பதற்கு மக்கள் தொகை நிர்ணயிப்பு, குடிநீர் வரவு செலவு திட்டம், நீர் ஆதாரத்தின் இருப்பு, சேமிப்பு கட்டமைப்புகளை தீர்மானித்தல், இணைய மூலம் குடிநீர் வழங்களை கண்காணித்தல், கிராம ஊராட்சியில் ஒப்புதல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளில் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

இக்கூட்டத்தின் போது உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சௌந்தர்ராஜன், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் அனைத்து ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன சரக அலுவலக வளாகத்தில் திறன் அறிதல் மேம்பாட்டு பயிற்சி முகாம்.

Next Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் சமூக சீர்திருத்த துறை அரசு செயலாளர் த.ஆபிரகாம் தலைமையில் நடைபெற்றது.

Next Post
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் செம்போடை கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ஊராட்சி நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் சமூக சீர்திருத்த துறை அரசு செயலாளர் த.ஆபிரகாம் தலைமையில் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In