அதிமுக சார்பில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் விழாவிற்காக எடப்பாடி பழனிச்சாமியை சி.த.செல்லப்பாண்டியன் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார்.
அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் இடைக்கால பொது செயலாளர் முன்னாள் முதல்வரும் சட்ட மன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி.கே.பழனிச்சாமி தலைமையில் கிறிஸ்துமஸ் விழாவினை கோலாகலமாக கொண்டாட உள்ளது.
இந்நிலையில் அதிமுக சார்பில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பெரு விழாவை முன்னிட்டு சேலத்தில் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் வைத்து கழக இடைக்கால பொது செயலாளர் முன்னாள் முதல்வர் சட்ட மன்ற எதிர் கட்சி தலைவர் எடப்பாடி.கே.பழனிச்சாமியை கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கிறிஸ்துமஸ் பெருவிழா அழைப்பிதழை வழங்கினார்கள்.

இந்த நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் திருவள்ளுர் மத்திய மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், முன்னாள் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் ஜான் மகேந்திரன் மற்றும் வட்டச் செயலாளர்கள் மில்லர் ராஜா, துரைசிங்கம், வட்ட பிரதிநிதி மணிகண்டன், சிறுபான்மை பிரிவு பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

