தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழக முதல்வர் விருது பெற்ற தொழில் நுட்ப பிரிவு காவல் ஆய்வாளருக்கு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார்.
ஓவ்வொரு ஆண்டும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழக முதல்வர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2020ம் ஆண்டில் தொலை தொடர்பு பிரிவில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தூத்துக்குடி மாவட்ட தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் தொழில்நுட்ப பிரிவு காவல் ஆய்வாளர் கிருஷ்ணசாமி தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு தமிழக முதல்வர் விருது வழங்கப்பட்டது. சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் கடந்த 27.02.2021 அன்று தேர்வு செய்யப்பட்ட தமிழக காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கம் விருது வழங்கப்பட்டது.

அப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப பிரிவு காவல் ஆய்வாளர் கிருஷ்ணசாமியும் பெற்றார். தமிழக முதல்வர் விருது பெற்ற தொழில்நுட்ப பிரிவ காவல் ஆய்வாளரை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுவாக பாராட்டி, மென்மேலும் அவரது பணி சிறக்க வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியின்போது தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

