தூத்துக்குடி தமிழக அரசு விளையாட்டு துறையை ஊக்குவித்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. அகில உலக சிலம்பாட்ட கழகத்தின் சார்பில் கன்னியாகுமாரி மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் தேசிய தமிழ் கலைக்கூடம் சிலம்பாட்ட கழகத்தின் சார்பாக கலந்து கொண்ட குழந்தைகள் பல்வேறு போட்டிகளில் 21 தங்கபதக்கங்கள் 15 வெள்ளி பதக்கங்கள் 9 வெண்கல பதக்கங்கள் என்று சான்றிதழ் பெற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இதனையடுத்து போல்பேட்டையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனை அவரது இல்லத்தில் சந்தித்த குழந்தைகள் அனைவரையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் வட்டச்செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான செல்வராஜ், சுக் என்ற முருகன், தமிழ் கலைக்கூடம் சிலம்பாட்ட கழகத்தின் பயிற்சியாளர் ஜி.இ.ராஜா, மற்றும் அல்பட் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

