தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து இலவச கண் சிகிச்சை, பல் மருத்துவம், சர்க்கரை நோய் மற்றும் இரத்தகொதிப்பு உட்பட பல்வேறு சிகிச்சைக்கான பரிசோதனை முகாம் இன்று (28.02.2021) நடைபெற்றது. இந்த மருத்துவ சிகிச்சை முகாமை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசும் போது, நமது உடல் நலம் மிக முக்கியமானது. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும். நல்ல பழவழக்கங்களை பின்பற்றி நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். காவல்துறையினர் அனைவரும் இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்து வருகின்றனர். அவ்வப்போது உடல் நிலை குறித்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு, அதில் குறைபாடுகள் இருந்தால், உரிய சிகிச்சை மேற்கொண்டு உடல் நலத்தை பேணி காக்க வேண்டும். இந்த மருத்துவ முகாமை காவல்துறையினர் அனைவரும் பயன்படுத்தி பயனடையுமாறு கூறி தனது உரையை நிறைவு செய்தார்.


இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை சுஷ்லான் காற்றாலை நிறுவனம் சார்பாக நிறுவன மாநில தலைவர் திரு. ஜெயகுமரன், சட்ட ஆலோசகர் திருமதி. சந்திரபிரபா, நிறுவன பொறுப்பாளர் . முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்த முகாமில் அகர்வால் கண் மருத்துவமனை பொது மேலாளர் உலகநாதன், நிர்வாகி சதீஷ், பிரின்ஸ் பல் மருத்துவமனை மருத்துவர் திருமதி. காந்திமதி, மோகன்ஸ் நீரிழிவு மையம் சார்பாக மருத்துவர் குமாரவேல், தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன், ஆயுதப்படை காவல் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணபிரான், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், ஈஸ்வரமூர்த்தி சுனைமுருகன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட காவல்துறையினர் சுமார் 200 பேர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.

