வேதாரணியம் டிசம்பர் 8
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் பி வி கே பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிகாரப்பூர்வ அ.இ .அ தி மு க என்பது இதுவரை முடிவு செய்யப்படாத நிலையில் அ.இ,அதிமுக வில் உட்கட்சிவிவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் நடத்திய போராட்டத்தில் பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பங்கு எடுத்ததும் மத்திய அரசு நடத்திய ஜி-20 மாநாட்டிற்கு அஇஅதிமுகவின் பிரதிநிதியாக பதவியே இல்லாத எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதும்
ஆட்சேபணைக்குரியது. இன்றைய தேதியில் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம்
இது தொடர்பாக அவர்தான் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பி உள்ளார்.அ இ அ தி மு க வின் பிரதிநிதி யார் என்பதை அடையாளப்படுத்துவதில் மத்திய அரசுக்கு கவனம் தேவை என்பதை தெரிவித்துள்ளார்.

