நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மிக கனமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் கலந்து கொண்டார்.
நாகப்பட்டினம் டிசம்பர் 7
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மிக கனமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது
வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வழுத்தம் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் வருகின்ற 08.12.2022 மற்றும் 09.12.2022 ஆகிய நாட்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வானிலை முன்னறிவிப்பு வரப்பெற்றுள்ளதை தொடர்ந்து பொது மக்கள் மற்றும் மீனவர்கள் முன்னெச்சரிக்கையாக இருந்து கொள்ளவும், மேலும் மேற்படி வானிலை அறிக்கையினை தொடர்ந்து நம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசரக்கால 24*7 கட்டுப்பாட்டு அறை மையத்தில் 04365-1077 கட்டணமில்லா தொலைபேசி எண் இயங்கிவருகிறது.

இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் இயற்கை இடர்பாடு மற்றும் தமிழ்நாடு மின்சாரவாரியம் தொடர்பான தேவைகள் குறித்தும் அவசரகால மையத்தில் தரைவழி தொலைபேசி 04365-251992 என்ற எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்.
மேலும், 8438669800 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் குறுஞ்செய்தியும் அனுப்பிடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ், தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா கூடுதல் ஆட்சியர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமம் ம.பிரதிவிராஜ் நாகப்பட்டினம் உதவி ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக
நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

