தூத்துக்குடி அருகே வேப்பலோடையில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் திறப்பு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் அருளாசியுடன் தூத்துக்குடி அருகே உள்ள வேப்பலோடை கடற்கரை சாலையில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் திறப்பு விழா நடைபெற்றது. ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி.ஆர்.முருகன் திறந்து வைத்து தீபம் ஏற்றினார். குரு பூஜை, வினாயகர் பூஜையுடன் தொடங்கிய விழாவில் உப்பளத்தொழில் சிறக்கவும், மக்கள் நலமுடன் வாழவும், கல்வி அறிவு சிறக்கவும் வேண்டி 108, 1008 தமிழ் மந்திரங்கள் கூறி குங்கும அர்ச்சனை செய்து பெண்கள் வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளாக வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டது.
விழாவில், குளத்தூர் பஞ். துணைத் தலைவர் மாரிசெல்வி, வேப்பலோடை மன்ற பொறுப்பாளர்கள் சுப்பிரமணியன், முனியசாமி, ஆன்மிக இயக்க மாவட்ட பொருளாளர் கண்ணன், இணைச் செயலாளர் முத்தையா, திருவிக நகர் சக்திபீட துணைத் தலைவர் திருஞானம், மகளிர் அணி மாரியம்மாள், அழகுமாரி, முருகவள்ளி, செல்வி, குளத்தூர் மன்ற தலைவி உஷா உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வட்ட தலைவர் தேவராஜுலு செய்திருந்தார்.

