மதுரவாயல் பகுதியில் காரில் 18 கிலோ கஞ்சாவுடன் வந்த ஜெயசூர்யா என்பவர் மற்றும் 7 நபர்களை கைது செய்து, 18 கிலோ கஞ்சா, 1 கார் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றைக் கைப்பற்றுதல் செய்த பூந்தமல்லி மற்றும் திருவேற்காடு காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.


சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவான “போதை தடுப்புக்கான நடவடிக்கையின் தொடர்ச்சியாக, பூந்தமல்லி சரக உதவி கமிஷ்னர் கே.என்.சுதர்சன் மேற்பார்வையில், பூந்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் என்.எஸ்.குமார், திருவேற்காடு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஆர்.அலெக்ஸ் தலைமையில், தலைமைக் காவலர் ரத்தினவேலு, முதல்நிலைகக் காவலர் சிவகணேசகுமார் மற்றும் காவலர் யூனிஸ்கான் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் பிப்ரவரி 23ம்தேதி அன்று புளியம்பேடு, சிறு குறுக்கு தெருவில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, அவ்வழியே வந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, காரில் கஞ்சா கடத்தி வந்த ஜெயசூர்யா, வ/24, தஞ்சாவூர், சஞ்சய், வ/20, தஞ்சாவூர், ஸ்ரீநாத், வ/21, மதுரை ரஞ்சித்குமார், வ/19, சிதம்பரம், பிரசாந்த், வ/19, வண்டலூர், சாத்குமார், வ/27, திருவாரூர், .அருண், வ/20, ஆவடி சேரன், வ/22, தஞ்சாவூர், ஆகிய 8 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 18 கிலோ எடை கொண்ட கஞ்சா, 1 கார் மற்றும் 1 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் காவல் குழுவினரை, சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் இன்று நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

