• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

‘மதத்தை மதிப்போம், மனிதநேயத்தை வளர்ப்போம்’ – பள்ளி கிறிஸ்துமஸ் விழாவில் தூத்துக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேச்சு

policeseithitv by policeseithitv
December 3, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பழைய மாணவர்கள் ஒருங்கிணைந்த 5 வது குடும்ப விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி. டிச. 3,
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள ராஜபாளையம் சர்க்ரெட் ஹார்ட் மெட்ரிகுலேசன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
பள்ளி கிறிஸ்துமஸ் விழாவில் அருட்.சகோதரி மரியநேசம் தலைமை வகித்தார். கராத்தே மாஸ்டர் முத்துசங்கர் குமார் வரவேற்புரையாற்றினார். மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள், கிறிஸ்துவ கீத ஆராதனைகள், இயேசுவின் பிறப்பு குறித்த நிகழ்வுகள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் பேசுகையில்: அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல ஒழுக்கத்துடன் குழந்தை செல்வங்கள் படிக்க வேண்டும். மதத்தை மதிப்போம், மனித நேயத்தை வளர்ப்போம். ஒற்றுமையை பேணி பாதுகாப்போம். மக்கள் நலன் ஒன்றே தான் முக்கியம் என்று பணியாற்றுவோம் என்று பேசினார்.
தருவைகுளம் பங்கு தந்தை வின்செண்ட் பேசுகையில்: அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும். செல்போன் உபயோகப்படுத்தாமல் குழந்தைகள் படிக்க வேண்டும். ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. அனைவரிடமும் நல்லொழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும், என்றார்.
தூத்துக்குடி வடக்கு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பாட்ஷா பேசுகையில்: எனது தாய் ஆசிரியராக பணியாற்றினார். நான் ஒரு முஸ்லீமாக இருந்தாலும், நாசரேத் பள்ளியில் 3 வருடம் படித்தேன். தினமும் உணவு உட்கொள்வதற்கு முன்பு எல்லா உயிரினங்களுக்கும் உணவு கிடைத்து வாழ வேண்டும் என்று ஜெபம் செய்து விட்டு தான் உணவை அருந்துவேன். நாம் எப்படி நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோமோ, அதேபோல் எல்லோரும் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையோடு வாழ வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன், என்று பேசினார்.
விழாவில், தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளரும், தூத்துக்குடி மாவட்ட மல்யுத்த சங்க தலைவருமான அம்பா சங்கர், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்: பாரதிராஜா, பெலிக்ஸ், தெற்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர் மாரிச்செல்வம், மாவட்ட பிரதிநிதி நெல்சன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள்: சுதர்ஸன், ஆம்ஸ்ராங் மற்றும் கௌதம், பள்ளி உதவி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக அப்பள்ளியில் மாணவ-மாணவிகள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற கோப்பை, கேடயம், மெடல், சான்றிதழ்கள் உள்ளிட்டவைகளை பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. அறிவியல் சார்ந்த தயாரிப்பு பொருட்களையும் பள்ளியின் அறையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததை கலந்து கொண்ட விருந்தினர்கள் அனைவரும் பார்வையிட்டனர்.
பள்ளி தலைமையாசிரியர் அந்தோணி சாராள் ரோஸ் நன்றியுரையாற்றினார்.

Previous Post

தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பழைய மாணவர்கள் ஒருங்கிணைந்த 5 வது குடும்ப விழா

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தமிழக விவசாயிகளின் பயன்பாட்டிற்காக மலேசியாவிலிருந்து கப்பல் மூலம் 44,000 மெட்ரிக் டன் யூரியா காரைக்கால் துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In