சென்னை தரமணியில் செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞரான தனிநாயகம் அடிகளின் முயற்சியால், சி.என். அண்ணாதுரை முதலமைச்சராக இருந்தபோது அறிவிக்கப்பட்டு, 1970ல் இருந்து செயல்படத் துவங்கியது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் எதற்காக உருவாக்கப்பட்டது, அதன் நோக்கம் என்ன என்பதை, அந்த அமைப்பின் இணையதளத்தின் முகப்புப் பக்கம் பின்வருமாறு கூறுகிறது: “தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல், தமிழின் பெருமையை அயலவருக்குச் சிறப்பாக எடுத்துரைத்தல், உலகத் தமிழறிஞரிடையே தொடர்பு கொண்டு தமிழறிஞர்களும், நிறுவனமும் பயன்கொளும் நிலையில் தமிழாய்வினை வளர்த்தல் என்பன உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அடிப்படை இலக்காக, தலையாய நோக்கமாக அமைகின்றன. இந்த அமைப்பின் சார்பில் 73 வது தமிழ் தாய் பெருவிழா 01/02/2021 முதல் 28/02/2021 வரை நடைபெறுகிறது முதல்நாள் நிகழ்ச்சியாக பிப்ரவரி 1ஆம் தேதி
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் – திரு .ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் , திருக்கரங்களால் தமிழ்த்தாய் 73 – தமிழாய்வுப் பெருவிழாவில் “பொன்விழா மலர் புத்தகம்” வெளியிடப்பட்டது. உடன் மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் – திரு.க.பாண்டியராஜன் அவர்கள் , தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் பொறுப்பாளர் திருமதி டாக்டர் மகாலட்சுமி மற்றும் அலுவலர்கள் , நிகழ்ச்சி விருந்தினர்கள். கலந்து கொண்டனர் இந்தத் தொடர் நிகழ்ச்சியாக நேற்று முன் தினம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் திருமூலர் ஆய்வு இருக்கையின் 6ம் ஆண்டு தொடக்கவிழா பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடத்தில் வைத்து 23.2.2021 அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வள்ளலார் ஆய்வு இருக்கை பொறுப்பாளரும், திருமூலர் ஆய்வு இருக்கை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தலைமை பொறுப்பாளருமான முனைவர் தி.மகாலட்சுமி அவர்கள் வரவேற்புரையாற்றினார். தமிழ் வளர்ச்சி இயக்ககம் இயக்குநரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையுரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக தெய்வத்தமிழ் அறக்கட்டளை நிறுவனர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் கலந்து கொண்டார்.
விஷ்ணு பிரத்தியங்கரா தாந்திரீகபீடம் முனைவர் பீடாதிபதி அண்ணாசாமி, தமிழ்மாநில சித்தவைத்திய சங்க தலைவரும், மருத்துவம் (ம) கலைகள் பழந்தமிழர் வாழ்வியல் இருக்கை மருத்துவர் எம்.பாஸ்கர், பழந்தமிழர் வாழ்வியல் இருக்கை பொறுப்பாளர் மருத்துவர் சி.ஜெயசந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பட்டமளிப்பு சிறப்பு அழைப்பாளராக கோவை ஞானாலயா வள்ளலாhர் கோட்டம் இமயஜோதி திருஞானாந்தா சுவாமிகள் கலந்து கொண்டு, கல்வியாளர்கள், சமூக சேவகர்கள் பலருக்கு பட்டம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இப்பட்டமளிப்பு விழாவில் சமூக சேவகரும், தமிழ்நாடு சட்டப்பேரவை அனைத்து பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவரும், அமுதம் ரிப்போர்ட்டர் அமுதம் டிவி ஆசிரியர் டாக்டர் வாஞ்சிநாதன் உள்ளிட்ட பலர்; டாக்டர் பட்டம் பெற்றனர்.
பின்னர், ஓம் உலகநாதன், க.நெல்லைவசந்தன், தி.சிவநேசன், தே.செல்வபூபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வள்ளலார் ஆய்வு இருக்கை பொறுப்பாளர் முனைவர் சுவாமி சுப்ரமணியம் அவர்கள் நன்றியுரையாற்றினார். பெரு முனைவர் பட்டம் பெற்ற டாக்டர் வாஞ்சிநாதன் அவர்களுக்கு தலைமைச் செயலக பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பிலும் மற்றும் ஏனைய பத்திரிக்கை அமைப்புகள் பல்வேறு சமூக சேவை அமைப்புகள் அரசியல் பிரபலங்கள் வாஞ்சிநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
செய்தி தொகுப்பு ஆசிரியர் எம் கண்ணன்

