தூத்துக்குடி,நவ,28
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மாநகரங்களில் தூய்மைக்கான மாபெரும் மக்கள் இயக்க பணி மாப்பிள்ளையூரணி ஊராட்சி டேவிஸ்புரம் ஜெ ஜெ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் சண்முகராஜா தலைமை வகித்தார். பொருளாளர் குருசாமி வரவேற்புரையாற்றினார்.
மாநிலத்தலைவர் சண்முகராஜா பேசுகையில் 1996ம் ஆண்டில் தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் சாலை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மறைந்த முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமி 300 சாலை பணியாளர்களை நியமனம் செய்திருந்தார். தொடர்ந்து 5 ஆண்டுகாலம் பணியாற்றிய சாலை பணியாளர்களை அதிமுக ஆட்சி காலத்தில் நீக்கம் செய்யப்பட்டனர். மக்கள் போராட்டம் சட்ட போராட்டம் மூலம் 2002ல் உத்தரவு பெற்று பணியில் சேர்ந்த சாலை பணியாளர்கள் அரசு வேலைநாட்களை தவிர்த்து விடுமுறைநாட்களில் எங்களுடைய போராட்டத்திற்கு துணை நின்ற மக்களுக்கு நன்றி கடன் செய்யும் விதமாக தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்த மாநகரம் பேரூராட்சி ஊராட்சி தூய்மைக்கான பணியை விடுமுறை நாட்களில் ஓவ்வொரு பகுதியாக தேர்வு செய்து மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட ஜெ ஜெநகர் பகுதியில் உள்ள பொதுக்கிணறு நந்தவனம் தூய்மை பணி மரம் நடுதல் பொது மயானத்தை தூய்மை படுத்துதல் என பணிகள் மேற்கொள்வது மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இது போன்ற மக்கள் பணியை செய்து வருகிறோம். மாப்பிள்ளை யூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடர்ந்து மக்கள் பணி செய்வது மட்டுமல்லாமல் எந்த கோரிக்கை வைத்தாலும் அதை முழுஈடுபாடோடு 3 ஆண்டுகாலமாக செய்து வருகிறார். பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை போல் இந்த ஊராட்சியை தூய்மையாக வைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.


பின்னர் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்; சங்க தலைவருமான கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் மரக்கன்று நட்டி தூய்மை பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சாலை ஆய்வாளர் குற்றாலிங்கம், மாவட்ட தலைவர் பழனிச்சாமி, செயலாளர் செம்புலிங்கம், பொருளாளர் அண்ணாதுரை, விருதுநகர் மாவட்ட தலைவர் முத்துச்சாமி, செயலாளர் பிரேம்குமார், பொருளாளர் ராஜா, நெல்லை மாவட்ட தலைவர் மாரிபாண்டி, செயலாளர் சங்கரபாண்டியன், பொருளாளர் சங்கரலிங்கம், உட்கோட்ட பொறுப்பாளர்கள் மாடசாமி, அரிபுத்திரன், தங்கவேல், பாலசுப்பிரமணியன், அருளானந்தம், ஜெயக்குமார், ஆறுமுகநயினார், வெள்ளச்சாமி, சத்தியநாதன், ராஜ்குமார், எட்வர்ட், ஜான்சன், தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதி சப்பானிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணிதனுஷ்பாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர் மகேஸ்வரி காமராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆனந்தகுமார், சக்திவேல், மற்றும் கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

