தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திரேஸ்நகர் பகுதியில் தூய்மை பாரத இயக்கம் மற்றும் விவிடி நினைவு பள்ளி என்சிசி மாணவ மாணவிகள் மாப்பிள்ளையூரணி ஊராட்சி தூய்மை காவலர்கள் பங்கேற்ற தூய்மை பணி நிகழச்சிக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தலைமை வகித்தார். தூய்மை பணியை தொடங்கி வைத்து சண்முகையா எம்.எல்.ஏ பேசுகையில் நம்முடைய வீட்டை எப்படி சுத்தமாக வைத்து பாதுகாத்து கொள்கிறோமோ அது போல் இந்த கிராமத்தை என்சிசி மாணவ மாணவிகள் தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு பணியாற்ற வேண்டும். இதுபோன்ற சமூக பணிகள் மூலம் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் அதே வேளையில் படிக்கும் காலத்திலேயே ஐஏஎஸ் ஐபிஎஸ் டாக்டர் உள்ளிட்ட உயர் பதவியை அடைய வேண்டும். என்ற இலக்காக லட்சியபாதையை வகுத்துக்கொள்ள வேண்டும் என்று மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளரும் ஊராட்;சி மன்ற உறுப்பினருமான ஸ்டாலின், தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி துணை அமைப்பாளர் ஆரோக்கியமேரி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, திமுக ஓன்றிய துணைச்செயலாளர் ராமசந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் ரத்தினமணி, பள்ளி நேர்முக உதவியாளர் சாகுல்ஹமீது, என்சிசி அதிகாரி ஜீஸஸ் ஆல்பன், மற்றும் கௌதம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

