வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் மேல காட்டில் மடையான் பறவைகளை வளை வைத்து பிடித்தவருக்கு அபராதம்.
வேதாரணியம் நவம்பர் 23 திருச்சிவன மண்டல தலைமை வனப் பாதுகாவலர் சதீத், நாகப்பட்டினம் வனஉயிரினக்காப்பாளர் யோகேஷ்குமார் மீனா, அவர்களின் உத்தரவின்படி வேதாரண்யம் வனச்சரக அலுவலர் பா.அயூப் கான் தலைமையில் வனவர்கள், ராமதாஸ், செல்வி, மகாலெட்சுமி, வனக்காப்பாளர்கள் ரணீஷ்குமார், ச இலக்கியா, வேட்டை தடுப்பு காவலர்கள் நிர்மல்ராஜ் ஆகியோர்கள் அடங்கிய சிறப்பு குழுவினர்கள் இன்று காலை கருப்பம்புலம் மேலக்காடு வயல்வெளியில் வளைவைத்து மடையான் பறவைகள் பிடித்த வீரமுத்து மகன் பாலமுருகன் (வயது 25) ஆகிய நபரினை பிடித்து விசாரணை செய்து இந்திய வனஉயிரினப் பாதுகாப்புசட்டம் 1972ன் படி வழக்குபதிவு செய்யப்பட்டு வனஉயிரினக்காப்பாளர் யோகேஷ்குமார் மீனா அவர்களின் உத்தரவின்படி அபராதமாக இணக்க கட்டணம் ரூ 25000/= வேதாரண்யம் வனச்சரக அலுவலர் பா.அயூப் கானல் விதிக்கப்பட்டது.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

