தூத்துக்குடி.நவ.14,
தமிழக அரசின் நல திட்டங்களை செயல்பாடுகளை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் முக்கிய பங்கு வகிப்பது உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தான். தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற நாள் முதல் மாநகரில் உள்ள 60 வார்டு பகுதிகளில் இருக்கும் குறைபாடுகள் என்ன? செய்ய வேண்டிய பணிகள் எவை? என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் எந்த பணியை முதலில் செய்வது பின்னர் எந்த பணியை செய்து கொடுக்க வேண்டும் என்ற வரைமுறை பட்டியல் தயாரிக்கப்பட்டு, தினந்தோறும் பாராபட்சமின்றி அனைத்து பகுதிகளுக்கும் சென்று தனக்கு வாட்ஸ்-அப், மூலம் வரும் குறைகளையும் தீர்ப்பதற்கு ஒவ்வொரு பகுதியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கடந்த காலத்தில் இருந்த தூத்துக்குடி மாநகராட்சி தற்போது 6 மாத காலத்தில் தொலைநோக்கு பார்வையோடு புதிய பணிகள் பல நடந்துள்ளன.
இனிவரும் காலம் மாநகர வளர்ச்சியில் அனைத்து தரப்பினரும் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக பசுமையான மாநகரை உருவாக்குவது, தூய்மையான சுற்றுச்சூழலை கடைப்பிடிப்பது, நெகிழிகளை தவிர்த்து மஞ்சப்பை உபயோகப்படுத்துவது, மாநகர் மக்களின் நலன் கருதி, மாநகராட்சி 4வது தளத்தில் மாநகர மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நவீன தொழிற்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் கேமிரா மூலம் கண்காணிப்பது என புதிய திட்டங்களின் மூலம் தடம் பதித்துள்ள மாநகராட்சி, ஊராட்சி பகுதியாக இருந்து மாநகராட்சியோடு இணைக்கப்பட்டுள்ள ஊராட்சி பகுதியில் இருக்கும் சி.வ.குளம் பராமரிப்பு பணிகளை பல மாதங்களுக்கு முன்பு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்த நிலையில், அதற்கு மேலும் மெருகூட்டும் வகையில் மேயர் ஜெகன்பெரியசாமி குளத்தை சுற்றியுள்ள பகுதியில் பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டு, பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் பணிகள் நடைபெறுகிறது. நிறைவு பெற்ற பின் இயற்கையின் அழகை குடும்பத்தோடு சென்று பொழுதுபோக்கும் வகையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு குளத்தைச் சுற்றி அலங்கார மின்விளக்குகள் அமைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா என்பதை அலசி ஆராய்ந்து திட்டத்தை செயல்படுத்த உள்ளாராம். இதுபோன்ற பல்வேறு அதிரடி திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் தமிழகத்தில் மற்ற மாநகராட்சிகளுக்கு முன்னுதாரணமாக தூத்துக்குடி மாநகராட்சி கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி அனைத்து பணிகளும் துரிதமாக நடைபெறுகின்றன.
மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என்று பணியாற்றும் மேயர் ஜெகன் பெரியசாமியின் சாதனை பணிகளுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

