• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழகத்தின் கலாச்சாரத்தை சீர்குழைக்க நினைக்கும் எதிர்கட்சிகளின் எண்ணம் நிறைவேறாது: அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி எச்சரிக்கை

policeseithitv by policeseithitv
November 14, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழகத்தின் கலாச்சாரத்தை சீர்குழைக்க நினைக்கும் எதிர்கட்சிகளின் எண்ணம் நிறைவேறாது: அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி. நவ.14.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட மாநகர திமுக இளைஞரணி சார்பில் இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் போல்டன்புரத்தில் மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த கப்ரேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில்: மாநில இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் புதிதாக 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களை திமுக உறுப்பினராக சேர்க்கும் பணி ஏற்கனவே நடைபெற்று வருகிறது. இருந்த போதிலும், வீடுகள் தோறும் சென்று கழக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி கலைஞர் வழியில் ஆட்சி செய்யும் முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது, என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழில் கல்வி படித்தால் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. நம்முடைய தூத்துக்குடி மாவட்டத்தில் பர்னிச்சர் பார்க், டைட்டல் பார்க், ஆயில் நிறுவனம் என நான்கு பெரிய தொழில் நிறுவனங்கள் அமைய உள்ளன. அதன் மூலம் படித்த இளைஞர்கள் உட்பட பலருக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழில் பெருகும் போது எல்லோருக்கும் நன்மைகள் கிடைக்கின்ற வகையில் முதலமைச்சர் ஜாதி, மதம் என எவ்வித வேறுபாடும் பார்க்காமல் அனைவரையும் சமமாக கருதி பணியாற்றி வருகிறார். கல்வி தரம் உயருவதற்கும், தனியார் கல்வி நிறுவனங்கள் அரசு கூறியுள்ள கருத்துக்களை ஏற்றுத் தான் கல்விக்கட்டணம் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் முதலமைச்சரின் பணிகள் எல்லோராலும் பாராட்டப்படுகின்றன. வடஇந்தியாவில் தமிழகத்தில் இருப்பது போல் கல்வி, கலாச்சாரம், போன்றவைகள் வளர்ச்சியடையாத மாநிலமாக இருந்து வருகிறது. அதே போல் தமிழகமும் இருக்க வேண்டும் என்ற தவறான எண்ணத்தோடு பார்க்கப்பட்டு இங்குள்ள கலாச்சாரத்தை சீர்குழைக்கும் வகையில் எதிர்க்கட்சியை சார்ந்த பலர் பொய்யான தகவல்களை கூறி வருகின்றனர். ஆனால் வடஇந்தியாவில் உள்ளவர்கள் தமிழகத்தில் பிறந்த பெரியாரை போல் இங்கு ஒருவர் பிறக்கவில்லையே என்று ஏங்குகின்;றனர். அதற்கு காரணம் அவரின் கொள்கையின் மூலம் எல்லோருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் நன்மைகள் கிடைக்கும் வகையில் அவர் செய்த பணிகள் தான் காரணம். திராவிட மாடல் என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற தாரக மந்திரத்தை கொண்டதாகும். இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் திமுக மீது குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காக நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களுக்கு என்ன தெரியும். வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசினால், காணாமல் போய் விடுவீர்கள். இளைஞரணியினர் எழுச்சியுடன் பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் கீதா ஜீவன் பேசினார்.

மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: ஏற்கனவே எடுத்த முடிவின்படி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தொகுதிக்கு புதிதாக 10 ஆயிரம் பேர் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவிற்கிணங்க வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய தொகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் பலனாக சட்டமன்ற தேர்தலின்போது நல்ல மாற்றம் கிடைத்தது. தற்போது, வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதன் மூலம் புதிய உறுப்பினர்களை சேர்த்து முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் நாட்டு மக்களுக்காக பணியாற்றி வரும் முதலமைச்சருக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். மற்ற மாவட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்டம் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை செயலாளா பிரமிளா, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதிப், இலக்கிய அணி துணை அமைப்பாளர் நலம் ராஜேந்திரன், ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் பெருமாள், மாநகர விவசாய அணி அமைப்பாளர் தேவதாஸ், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் மாணவரணி துணை அமைப்பாளர் பால்மாரி, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அருண் சுந்தர், செல்வின், கவுன்சிலர்கள்: சரவணகுமார், வைதேகி, விஜயலெட்சுமி, கண்ணன், ஜெயசீலி, வட்ட செயலாளர்கள்: செல்வராஜ், கங்காராஜேஷ், மூக்கையா, சுரேஷ், வட்ட பிரதிநிதிகள்: ரஜினி முருகன், பாஸ்கர் மற்றும் மணி, மகேஸ்வரன் சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் கவுன்சிலரும், வட்ட செயலாளருமான செல்வராஜ் நன்றியுரையாற்றினார்.

Previous Post

முன்னாள் பாரத பிரதமர் நேரு-வின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அவரது திரு உருவ படத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

Next Post

மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என களப்பணியாற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி

Next Post
தமிழகத்தின் கலாச்சாரத்தை சீர்குழைக்க நினைக்கும் எதிர்கட்சிகளின் எண்ணம் நிறைவேறாது: அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி எச்சரிக்கை

மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என களப்பணியாற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In