வேதாரண்யத்தில் அடுத்த மூலக்கரை வயல்வெளியில் மடையன் கொக்கு பறவைகளை வலை வைத்து பிடிக்க முயற்சித்த வரை பிடித்து அபராதம்
வேதாரணியம் நவம்பர் 13 திருச்சி வன மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ் நாகப்பட்டினம் வனஉயிரிக் காப்பாளர் யோகேஷ்குமார் மீனா இவர்களின் உத்தரவின்படி வேதாரண்யம் வனச்சரக அலுவலர் பா.அயூப் கான் தலைமையில் ராமதாஸ் வனவர், வனக்காப்பாளர் ரணிஷ்குமார், இலக்கியா, வேட்டை தடுப்பு காவலர்கள் பாண்டியன், நிர்மல்ராஜ் ஆகியோர்கள் கொண்ட வேட்டை தடுப்பு சிறப்பு குழுவினர்களுடன் இன்று காலை மூலக்கரை வயல்வெளிகளை தணிக்கை செய்கையில் கோடாலி வட்டம் மூலக்கரையைசேர்ந்த பெல்லோரா(வயது 47) த/பெ சூசை என்பவர் மூலக்கரை வயல்வெளியில் மடையான், கொக்கு பறவைகளை பிடிக்க வயலில் வளைவைத்து பறவைகளை பிடிக்க முயற்ச்சிக்கும்போது வனச்சரக அலுவலர் அயூப் கான் தலைமையிலான வன குழுவினர்கள் மேற்கண்ட நபரை பிடித்து விசாரணை செய்து கைது செய்து இந்திய வனபாதுகாப்புச்சட்டப்படி வழக்குபதிவு செய்து நாகப்பட்டினம் வனஉயிரினக் காப்பாளர் யோகேஷ்குமார் மீனா உத்தரவின்படி இணக்க கட்டணமாக 15000/=அபராதம் விதிக்கப்பட்டது.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

