நாகப்பட்டினம் நவம்பர் 10 தமிழ்நாட்டைச் சார்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்பக் கல்விப் பயின்ற இளைஞர்களை தாய்லாந்து மியான்மர் மற்றும் கம்போடியா நாட்டிலுள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் ”டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்” வேலை ”அதிக சம்பளம்” என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்துச் சென்று கால்-சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்றவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவதாகவும் அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்களை துன்புறுத்தப்படுவதாகவும் தொடர்ந்து தகவல் பெறப்படுவதாகவும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள் ஒன்றிய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் வேலைக்கான விசா முறையான பணி ஒப்பந்தம் என்ன பணி? என்ற விவரங்களை சரியாகவும் முழுமையாகவும் தெரிந்து கொண்டும் அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிடில் தமிழ்நாடு அரசை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய துாதரகங்களை தொடர்பு கொண்டு பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்து கொண்டும் ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை மற்றும் வேலைக்குச் செல்லும் நாடுகளிலுள்ள இந்திய துாதரகங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படியும் வெளிநாட்டு வேலைக்கு செல்லுமாறு இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி தெரிவித்து தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் கடிதம் வரப்பெற்றுள்ளது. எனவே பணிக்காக வெளிநாடு செல்ல உள்ளோர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் மேற்கண்ட அறிவுரையினை பின்பற்றிடவும் உதவி தேவைப்படின் இத்துறையின் 9600023645 8760248625 044-28515288 ஆகிய தொடர்பு எண்களை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

