நாகப்பட்டினம் நகராட்சி பகுதியில் உள்ள தேசிய மேல்நிலை பள்ளி, சிஎஸ்ஐ பள்ளி மற்றும் அக்கரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி விகிதம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.நாகப்பட்டினம் நவம்பர் 10 நாகப்பட்டினம் நகராட்சி பகுதியில் உள்ள தேசிய மேல்நிலை பள்ளி சி;எஸ்ஐ பள்ளி மற்றும் அக்கரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு பள்ளியில் தேர்ச்சி விகித்தை அதிகரி;க்க ஆசிரிய, ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று அறிவுறுத்தினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதில் ஆசிரியரின் பங்கு முக்கியமானது, ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது மாணவர்கள் அலட்சியமாக நடந்து கொள்ளாமல், கூர்ந்து கவனித்து பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு புரிந்து படிக்க வேண்டும். எனவே பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகள் நல்ல ஒழுக்கம், நல்ல பழக்கம், கண்ணியம் மற்றும் தன்னம்பிக்கை போன்றவற்றை கற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமாக போதைப்பொருள்கள், மதுபழக்கங்களுக்கு எதிராக மாணவர்கள் இருக்க வேண்டும். மாணவர்கள் செல் போன்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இருசக்கர வாகனங்களை ஓட்டுவது போன்ற அனைத்தையும் தவிர்த்து படிப்பில் மட்டும் முழு கவனம் செலுத்த வேண்டும்.



ஆகவே படித்தால்தான் பெரிய வேலைகளில் அமர முடியும். நாடு வளர்ச்சி அடைவதில் பெறும்பங்கு மாணவ மாணவிகளிடம் உள்ளது. எனவே மாணவர்களாகிய நீங்கள் நன்றாக படித்து வாழக்கையில் நல்ல இடத்திற்கு வர வேண்டும். மாணவர்களாகிய உங்களின் ஒரே குறிக்கோள் படிப்பு ஒன்று மட்டுமே எனவும், ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களை படிப்பில் மட்டும் முழு கவனம் செலுத்த ஊக்குவிக்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களிடம் பாடங்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் நடத்துவதன் மூலம் மாணவர்களின் தேர்ச்சி விகிதம், பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகமாகும், நம் மாவட்டத்தின் 100 சதவீதம் தேர்ச்சி என்ற இலக்கை நிர்ணயம் செய்து கொண்டு ஆசிரியர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
மேலும் அக்கரைப்பேட்டை அரசினர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் கேட்பாரற்று கிடந்த தங்க டாலரை எடுத்து வகுப்பாசிரியரிடம் ஒப்படைத்த ஆறாம் வகுப்பு பயிலும் அனுஸ்ரீ என்ற மாணவியை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் பாராட்டி இனிப்பு வழங்கினார்
இந்த ஆய்வின் போது மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய்
மச்சோடா.

