• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
November 8, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் நவம்பர் 8

நாகப்பட்டினம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ம.பிரதிவிராஜ் நாகப்பட்டினம் சார் ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்ததாவது

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 2022 எதிர்கொள்ள ஏதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு வட்டவாரியாக பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்துத்துறை அலுவலர்களையும் உள்ளடக்கிய வட்ட அளவிலான 3 குழுக்கள் அதாவது முன்னெச்சரிக்கை மற்றும் இடம் பெயர்தல் குழு, தேடுதல் மற்றும் மீட்புக்குழு, தங்குமிடம் மற்றும் பராமரிப்புக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 11 நபர்கள் வீதம் 1 வட்டத்தில் 33 நபர்கள் அடங்கிய 3 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக, நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதிலும் 132 நபர்கள் அடங்கிய 12 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு வெள்ளம் மற்றும் புயல் ஏற்படும்பொழுது பாதிக்கக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைத்திட தயார் நிலையில் உள்ளார்கள்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 134 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை தங்கவைப்பதற்கு தேவையான 5 பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையம், 12 புயல் பாதுகாப்பு மையங்கள், 100 சமுதாயக்கூடம் 73 திருமண மண்டபங்கள், 145 பள்ளிகள், 22 கல்லூரிகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 29 முன்னெச்சரிக்கை அறிவிப்பு மையங்கள் செயல்பாட்டில் உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பயிற்சி பெற்ற 5000 முதல் நிலை பொறுப்பாளர்கள் மற்றும் 200 ஆப்தமித்ரா தன்னார்வலர்கள் மீட்புப்பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர்.புயல் மற்றும் வெள்ள பாதிப்பில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க 877 முதல்நிலை பொறுப்பாளர்களும், 100 கால்நடை பட்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகத்திடம் 182 ஆயில் என்ஜின், 1 புல்டோசர், 110 ஜே.சி.பி., 254 பவர்ஷா, 28 பவர் பம்ப், 292 ஜெனரேட்டர், 5 ஜென்செட், 76 குப்பை அள்ளும் இயந்திரம், 21153 சாக்கு பைகள், 149 லைப் ஜாக்கெட், 150 லைப்பாய், 5 ரப்பர் படகு மற்றும் இதர தேவையான உபகரணங்கள் கையிருப்பில் தயார் நிலையில் உள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் பொருட்டு தேவையான உபரகணங்களை பெறுவதற்கு ஏதுவாக உரிமையாளர்களின் விவரப்பட்டியல் தயார் நிலையில் உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுநாள் வரை பெய்த கனமழையால் மின்னல் தாக்கி 1 மனித உயிரிழப்பு, 31 கால்நடைகள் இறப்பு மற்றும் 15 வீடுகள் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட்டுவருகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசரக்கால கட்டுப்பாட்டு அறை மையத்தில் 04365-1077 கட்டணமில்லா தொலைபேசி எண் இயங்கிவருகிறது. இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் இயற்கை இடர்பாடு மற்றும் தமிழ்நாடு மின்சாரவாரியம் தொடர்பான புகார்களை தெரியப்படுத்தலாம். மேலும், அவசரகால மையத்தில் தரைவழி தொலைபேசி 04365-251992 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். மேலும், 8438669800 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் குறுஞ்செய்தியும் அனுப்பலாம் என சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் நாகப்பட்டினம் நகர மன்ற தலைவர் இரா.மாரிமுத்து ஒன்றிய குழு தலைவர் வே.அனுசுயா சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக பிரம்மசக்தி போட்டியின்றி தேர்வு – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றார். 

Next Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சி கூடத்தினை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்து, 167 பயனாளிகளுக்கு ரூ.1,00,03,247 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In