நாகப்பட்டினம் நவம்பர் 7
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மக்கள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 151 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வருவாய்துறை சார்பில் நாகப்பட்டினம் வட்டம், அகர ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த அம்சவள்ளி சோமு என்பவருக்கு வீட்டுமனை பட்டாவினையும், திருமருகல் ஊராட்சி ஒன்றியம் உத்தமசோழபுரம் கிராமத்தை சேர்ந்த சுந்தர் த/பெ தங்கராசு என்ற மாற்றுத்திறனாளிக்கு மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

